12 ராசிக்கான ராசிக்கல் பலன்..! Rasikal Palan In Tamil..!
Rasikal Mothiram In Tamil: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் உங்கள் ராசிக்கு எந்த ராசி கற்கள் கொண்ட மோதிரத்தினை அணிய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய காலங்களிலும் நம் தமிழர்கள் புதிதாக வீடு கட்ட துவங்கும் முன் நவமணிகளை வீட்டின் தலை வாசலில் புதைக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து உள்ளது. மேலும் நவமணிகளானது கோவில் கருவறையில், கோவில் கோபுர அஸ்திவாரங்களிலும் புதைக்கப்பட்டு இருக்கும். இப்படி பல சிறப்புகள் வாய்ந்த ராசி கற்களை அணிவதன் மூலமாக ராசியின் நற்பலன்களை எளிமையாக பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய பிறப்பு ராசியினை பொறுத்து சரியான ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் ஜோதிடரின் ஆலோசனையை பெற்ற பின்னரே ராசி கற்களை அணிவது மிகவும் சரியானது. சரி வாங்க இப்போது இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கு எந்த ராசிக்கற்கள் (rasi kal) பொருத்தமானவை என்பது பற்றித்தான் விரிவாக படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம்.
![]() |
மேஷ ராசி கல் / mesha rasi stone:
பவளம்
மேஷ ராசி அதிர்ஷ்ட கல்: மேஷ ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் பவளம். பவளம் மோதிரத்தினை அணிவதால் அவர்களுக்கு தெய்வ கடாட்சம் கிடைக்கும். அடுத்தவர்களிடம் இருக்கும் வீண் கோபங்கள் மறைந்து அன்பு பெருகும். மேலும் வீட்டில் சந்தோசம் பெருகும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
பவள மோதிரத்தினை அணிவதால் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்துவிடும். அதோடு தெய்வ சிந்தனை, நல்லறிவு, துணிச்சலை கொடுக்கும். புதிதாக தொழில் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தும். மேலும் செய்கின்ற தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக செவ்வாய் திசை உள்ளவர்கள் இந்த பவள மோதிரம் அணியலாம்.
ரிஷப ராசி அதிர்ஷ்ட கல் / rishaba rasi lucky stone:
வைரம்
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரக்கல் (rasi kal) பதித்த மோதிரம். ரிஷப ராசியினர் வைரம் மோதிரத்தினை அணிவதால் மகிழ்ச்சியையும், யோகத்தினையும், வசீகரத்தையும் கொடுக்கும். தோற்றப்பொலிவு உண்டாகும். மனம், மெய் ஆகிய இரண்டிற்கும் வளத்தினை சேர்க்கும். கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க செய்யும் இந்த வைர மோதிரம்.
மேலும் தொழிலில் விருத்தி நடைபெறும், வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் கொடுக்கும். எந்த செயலிலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கக்கூடியது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக சுக்கிர திசை நடப்பவர்கள் இந்த வைரம் பதித்த மோதிரத்தினை அணியலாம்.
மிதுன ராசி கல் / mithuna rasi stone:
மரகதம்
மிதுனம் ராசி கல்: மிதுன ராசியினர் அணிய வேண்டியது மரகத மோதிரம் ஆகும். மரகதம் பதித்த மோதிரத்தினை மிதுன ராசிக்காரர்கள் அணிந்தால் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டமும் அளிக்கும். பேச்சாற்றலில் கவனமும், சாமர்த்தியமும் அதிகரிக்க செய்யும்.
மரகத மோதிரம் கைகளில் அணிவதால் நல்ல கல்வி செல்வத்தை கொடுக்கும். மேலும் புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்டங்களையும் நல்ல எண்ணங்களையும் உருவாக்கும். கற்பனை திறனை கொடுக்கும். மலட்டு தன்மையினை நீக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து வைக்கும். குறிப்பாக புதன் திசை நடப்பவர்கள் இந்த மோதிரத்தினை அணியலாம்.
![]() |
கடக ராசி கல் / kadagam rasi kal:
முத்து
கடக ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் முத்து. முத்து பதித்த மோதிரத்தினை அணிவதால் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் அளிக்கும். மனதில் உள்ள வீண் சந்தேகங்களை நீக்கிவிடும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.
ஆண்களுக்கு தன்னம்பிக்கையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும். தம்பதி இருவருக்கும் இடையில் ஒற்றுமையினை கொடுக்கும். முத்து பதித்த மோதிரம் அணிவதால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். உறவு முறைகளை வலுப்படுத்தும். நட்பினை பாதுகாக்கும். குறிப்பாக புதன் திசை நடப்பவர்கள் இந்த முத்து பதித்த மோதிரத்தினை தாராளமாக அணியலாம்.
சிம்ம ராசி கல் / simma rasi kal:
மாணிக்கம்
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டிய மோதிரமானது மாணிக்கம் பதித்துள்ள மோதிரமாகும். மாணிக்கம் பதித்த மோதிரம் அணிவதால் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளை கட்டுப்பாட்டுடன் வைக்கும். வீண் பேச்சு வார்த்தைகள் குறையும். தீய எண்ணங்கள் கொண்ட நண்பர்களின் உறவுகள் நின்றுபோகும்.
மாணிக்க மோதிரம் நல்ல உடல் நலம் மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் வாழ்வில் உயர்வை கொடுக்கும். உடலுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மனதிற்கு மன உறுதியையும், தன்னம்பிக்கையும் தரும். பகைவரிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கும்.
நிம்மதியான தூக்கம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். செய்கின்ற தொழிலில் அதிக லாபம் கிடைக்கப்பெறும். சூரிய திசை நடப்பவர்கள் இந்த மாணிக்க மோதிரத்தினை அணியலாம்.
கன்னி ராசி கல் / kanni rasi lucky stone:
மரகதம்
கன்னி ராசி கல்: கன்னி ராசியினர் அணிய வேண்டிய அதிர்ஷ்ட கல் மரகதம். கன்னி ராசிக்குரிய மரகத மோதிரமானது அவர்களுக்கு தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டமும் அளிக்கக்கூடியது. மலட்டு தன்மையை போக்கும். காதல் உணர்வை கொடுக்கும்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி செல்வத்தினை கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மை விடுவித்து பாதுகாப்பாக வைத்திருக்கும். பேச்சு திறனை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெருகும். மரகதம் பதித்த கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியை கொடுக்கும். குறிப்பாக புதன் தசை நடப்பவர்கள் இந்த மோதிரத்தினை அணியலாம்.
இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
துலாம் ராசி கல் / Thulam Rasi Lucky Stone:
வைரம்
துலாம் ராசியினர் அணிய வேண்டிய மோதிரமானது வைரம் பதித்த கல். துலாம் ராசியினர் வைரம் பதித்த மோதிரத்தினை அணிவதால் குடும்பத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்கும். மன திடத்தை அதிகரிக்கும். இதன் மூலம் தேவையற்ற பயங்கள் விலகும். வைரம் பதித்த மோதிரமானது மகிழ்ச்சியும், யோகத்தையும் தரக்கூடியது. மேலும் வைர மோதிரமானது வசீகரத்தையும், நெஞ்சுறுதியையும் தரும்.
தன்னம்பிக்கை இல்லாதவரிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் . ஆண், பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தை கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை போக்கும். தொழில் செய்வதற்கு வெளிநாடு செல்ல யோகம் கிடைக்கும். பிறரிடம் உங்களுடைய மதிப்பானது உயரும். வைர மோதிரமானது நல்ல உடல் பலத்தை கொடுக்கும். இந்த வைரம் பதித்த மோதிரத்தினை சுக்கிர தசை நடப்பவர்கள் தாராளமாக அணியலாம்.
விருச்சிக ராசி கல் / Viruchigam Rasi Stone Palan:
பவளம்
விருச்சிக ராசியினர் அணிய வேண்டியது பவள மோதிரம். செவ்வாய் மற்றும் கேது தசை நடப்பவர்கள் கூட இந்த பவளம் மோதிரம் அணியலாம். பவள மோதிரம் அணிவதால் தெய்வ கடாட்சம் உண்டாகும். கோபம் குறையும். மேலும் அதிர்ஷ்டம் பெருகும். மனதில் உள்ள பயத்தினை நீக்கி நல்ல துணிச்சலை தரும். விருச்சிக ராசியினர் பவள மோதிரத்தினை அணிவதால் பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களை நீக்கி நல்ல ஞானத்தை கொடுக்கும்.
மேலும் பயத்தை போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் பெருகும். மனதில் உள்ள வெறுப்பு மறைந்து அன்பு பெருக்கெடுக்கும். பேச்சு திறன் அதிகரிக்கும். தெய்வ அனுகூலங்கள் கிட்டும். குழந்தைகளின் அறிவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயர்ந்து செயல்படும் அனைத்து செயல்களும் வெற்றி அடையும். கேது தசை நடப்பவர்கள் இந்த பவள மோதிரம் அணிவதால் பதவி உயர்வு கிடைக்கப்பெறும்.
தனுசு ராசி கல் / Dhanusu Rasi Stone:
கனக புஷ்பராகம்
தனுசு ராசி கல்: தனுசு ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் கனக புஷ்பராகம். குரு தசை நடப்பவர்களும் இந்த கனக புஷ்பராகம் மோதிரத்தினை அணியலாம். இந்த மோதிரத்தினை அணிந்தால் நல்ல செல்வத்தையும் மற்றும் மன அமைதியையும் கொடுக்கும். கனக புஷ்பராகம் அணிவதால் நல்ல கம்பீரத்தை கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திருமணத்தில் இருந்த தடை நீங்கும். புதிதாக வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும். குரு தசை உள்ளவர்கள் இந்த மோதிரம் அணிவதால் நல்ல செல்வ விருத்தியை கொடுக்கும். ஆரோக்கியமான உடல் வளத்தினை கொடுக்கும். பூர்விக சொத்துக்கள் வந்தடையும். மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்கி நல்ல தீர்வை தரும்.
ஒவ்வொரு ராசிக்கும் உரிய ராசி பலன்களை விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்..! | Today Rasi Palan |
மகர ராசி கல் / Makara Rasi Kal In Tamil:
நீலக்கல்
மகர ராசியினர் அணியவேண்டிய மோதிரம் நீலக்கல். ராகு மற்றும் சனி தசை நடப்பவர்கள் இந்த நீலக்கல் பதித்த மோதிரத்தினை அணியலாம். மகர ராசியினர் நீலக்கல் மோதிரத்தினை அணிவதால் சமூகத்தில் நல்ல செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையை தரும். மேலும் நல்ல செல்வ வளம் மற்றும் நற்பண்புகளை கொடுக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும். ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையினை போக்கி வம்பு, வழக்குகள் ஏதேனும் இருந்தால் சாதகமான சூழலை உருவாக்கும்.
கும்ப ராசி கல் / Kumbha Rasi Kal Mothiram:
நீலக்கல்
கும்ப ராசியினர் அணியவேண்டிய மோதிரம் நீலக்கல் பதித்த மோதிரமாகும். இந்த கல்லை ராகு மற்றும் சனி தசை நடப்பவர்கள் அணியலாம். கும்ப ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டி போன்றவைகளை தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த கல் தியானத்திற்கு சிறந்தது. மேலும் திருமண உறவை மேம்படுத்தும். தேவையற்ற சண்டைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். பெருந்தன்மையை வளர்க்கும்.
மீன ராசி கல் / Meena Rasi Kal:
கனக புஷ்பராகம்
மீன ராசி அதிர்ஷ்ட கல்: மீன ராசியினர் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு தசை நடப்பவர்களும் இந்த கனக புஷ்பராகம் பதித்த மோதிரம் அணியலாம். இந்த மோதிரம் அணிவதால் செல்வ விருத்தி கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். பயம் நீங்கி துணிச்சல் பெருகும். பொருளாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடை அனைத்தும் நீங்கும். கோபம் குறையும். மேலும் புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும். குறிப்பாக பகை, சதி, சூழ்ச்சிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.
மாணிக்க கல்:
குறிப்பு: சிம்ம ராசிக்காரர்களும் சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை- உத்திரம்- உத்திராடம், மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை- சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும் எண் கணிதப்படி 1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்களும் மாணிக்க ராசி கல் அணியலாம்.
![]() |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |