2023 விருச்சிக ராசி பலன் | 2023 Viruchigam Rasi Palan
நண்பர்களே வணக்கம். இன்றைய பதிவில் 2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பது தான். நம் அனைவருக்கும் நன்மை மட்டும் கிடைக்குமா என்றால் இல்லை அதனுடன் தீமைகளும் கிடைக்கும். நன்மை தீமைகள் நமக்கு விளைவிப்பது மனிதர்கள் மூலம் இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்திற்கும் தலைமையாக இருப்பது என்னவோ நாம் ஜாதகம் தான்,
அந்த ஜாதகத்தில் ஒவ்வொரும் கட்டமும் நம்முடைய வாழ்க்கையை காட்டிவிடும். அந்த கட்டங்களை அருமையாக கணித்து நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடக்கிறது கெட்டது நடக்கிறதா என்பதை சொல்லிவிடுவார்கள். அந்த வகையில் விருச்சிக ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம் வாங்க..!
2023 விருச்சிக ராசி பலன்:
ஆரோக்கியம்:
விருச்சிகராசிக்கு ஆரோக்கியத்தில் ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 17 தேதிக்கு பின்பு ஆரோக்கியம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் சக பணியாளர்கள் வலுவாக இருப்பதால் அது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 5 ஆம் வீட்டிற்கு செல்கிறார் இதனால் சில கிரங்களில் மாற்றம் ஏற்படும். அதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். பெரிய குடலில் பிரச்சனைகள் ஏற்படும். எந்த உடல் பிரச்சனை வந்தாலும் அதனை உடனே மருத்துவரை அணுகி மருந்து பெற்று உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
வாகனம்:
விருச்சிகராசிக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் முதல் மாதம் சற்று சுமாராக இருக்கும், சொத்துக்களை விற்கும் நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வீடு நிலம் வாங்கும் நிலைக்கு கூட வருவீர்கள். விருச்சிகராசிக்கு வாகனம் வாங்க சிறந்த நாட்கள் ஜனவரி 22 முதல் மார்ச் 12 வரை நாள் ஆகும். இந்த புது வருடம் வாங்கும் வாகனங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வியாபாரம் எப்படி இருக்கும்:
வியாபாரத்தை பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் இருந்துகொண்டு தான் இருக்கும். அதேபோல் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும் அதன் மூலம் நல்ல பலன்களை அடைவீர்கள். வணிக வளர்ச்சியும் அதிகரிக்கும். பிப்ரவரி மற்றும் ஏப்ரல் உங்களிடையே பதட்டம் ஏற்படும். குறுக்கு வழியில் சென்று சம்பாதிப்பதை தவிர்த்துவிடுங்கள். நவம்பர் முதல் டிசம்பர் வரை நிறுவனத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்:
திருமண வாழ்க்கையை பொறுத்தவரையில் சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் வியாழன் ஐந்தாம் வீட்டிலும், சனியின் பார்வை ஐந்தாம் வீட்டிலும் இருப்பதால் அதிகமான அன்பை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அது வெற்றிகரமாக நடந்தேறும். செவ்வாய் ஏழாவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும். ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் 6 ஆவது வீட்டிற்குள் நுழைந்து 12 ஆவது வீட்டைப் பார்க்கும் போது உங்களின் காணப்படும் பிரச்சனைகள் அனைத்தும் குறையும் இருவரும் புரிந்துகொள்ள தொடகுவீர்கள், வருட கடைசியில் திருமண வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும்.
குழந்தைகள்:
ஜனவரி பிப்ரவரி-மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமான பேசலாம். சிறு வயதில் உள்ளவர்கள் திருமணம் ஆகும். உங்கள் பிழைகளை வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல பலனை கிடைக்கும். மேலும் அவர்கள் படித்துக்கொண்டு இருந்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். ஆண்டின் நடுப்பகுதில் சற்று தடுமாற்றங்கள் ஏற்படும். நவம்பர் அல்லது டிசம்பரில் நீங்கள் நிம்மதியும் திருப்தியும் அடைவீர்கள்.
காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்:
காதல் வாழ்கை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆண்டின்தொடக்கத்தில் 5 ஆம் வீட்டில் குரு இருந்தால் திருமணம் ஆகாதவர்கள் வாழ்க்கையில் ஒருவர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே காதலித்து வந்தால் அவர்களுக்கு கல்யாணம் நடக்கும். மேலும் அவர்கள் இருவரின் இடையே அன்பு அதிகரிக்கும் குறிப்பாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் அதிகரிக்கும். உறவு வலுவடையும். ஏப்ரல் மாதம் வரை எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் குரு மேஷ ராசிக்கு செல்லும் போது படிப்படியாக காதல் உறவில் பிரச்சனைகள் உருவாகும். மே மற்றும் ஆகஸ்ட் மாதம் அதிகம் பிரச்சனைகள் ஏற்படும். வருட கடைசியில் 2 மாதம் சிறப்பாகவே இருக்கும்.
குடும்ப வாழ்க்கை:
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி மூன்றாவது வீட்டில் இருப்பதால் பெற்றோரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஜனவரி மாதம் 17 தேதி சனி நான்காம் வீட்டில் நுழைவதால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். மற்றும் சனி 10 வீட்டில் பார்ப்பதால் குடும்பத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மூத்த பிள்ளைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். ஆகவே பெற்றோரின் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |