வீரமாகாளி ஆலய தல சிறப்புகள்..! Aranthangi Veeramakaliamman Temple In Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அறந்தாங்கியில் எழுந்தருளி இருக்கும் வீரமாகாளி கோவிலின் (Aranthangi Veeramakaliamman Temple) ஆலய அமைப்புகள், தல சிறப்புகள், பற்றிய முழு விவரங்களையும் இன்று படித்து அனைவரும் தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
காசி விஸ்வநாதர் திருக்கோயில் (Kashi Vishwanath Temple)..! |
அறந்தாங்கி வீரமாகாளி கோவில் வரலாறு / aranthangi veeramakaliamman:
வீரமாகாளி அம்மன் புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுந்தருளி உள்ளது. இந்த வீரமாகாளி அம்மன் பூமிக்குள் இருந்து வெளிப்பட்டதால் திருமண வேண்டுதல் உள்ளவர்கள் காணிக்கையாக இந்த அம்மனுக்கு பொட்டுத்தாலியை செலுத்துகிறார்கள்.
அறந்தாங்கியை சுற்றிருக்கும் அங்குள்ள 16 கிராமங்களுக்கும் வீரமாகாளி அம்மன் தான் அங்கு வாழும் மக்களுக்கு எல்லாம் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் மாதத்தில் முப்பது நாட்களும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
வீரமாகாளி கோவில் தல வரலாறு:
புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகிலுள்ள மூக்குடி என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் இந்த வீரமாகாளி அம்மன் தான் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.
அந்த காலத்தில் வீரமாகாளி அம்மன் சிறிய கல் வடிவில் மட்டுமே தோன்றி இருந்தது. அதனால் அம்மனுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் தோன்றியது.
மக்கள் மனதில் ஏற்பட்ட பின்னரே வீரமாகாளிக்கு நான்கு கரத்துடன் சிலையை எழுப்பினர். ஆனால் சிலை வைத்த பிறகு அம்மனின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், சிதைவு ஏற்பட்டதனால் மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர்.
அம்மன் சிலை சிதைவு அடைந்த அதே நாளில் கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கனவு ஒன்று தோன்றியது. அந்த கனவில் வீரமாகாளி அம்மன் “நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன்”. நான் வெளியில் வரும்நேரம் வந்துவிட்டது. நான் இருக்க மற்றொரு சிலை தேவையா என்று அம்மன் கனவில் அர்ச்சகரிடம் கேட்டது.
அம்மன் அர்ச்சகரிடம் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விட்டு அந்த ஆடு எங்கே சென்று அமருகிறதோ அந்த இடத்தை தோண்டினால் அம்மன் என் வடிவம் கிடைக்கும் என்று கூறியது.
அர்ச்சகர் உடனே கனவு கலைந்து எழுந்தவுடன் அந்த ஊர் மக்களிடம் இந்த கனவுகளை பற்றி விளக்கமாக கூறினார். அர்ச்சகர் சொன்னவுடன் ஊர்மக்கள் அனைவரும் இதை பின்பற்றினர்.
ஆடு அமர்ந்த இடத்தில் மக்கள் அனைவரும் அங்குள்ள மண்ணை தோண்டி பார்த்ததும் சில அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்தது. அந்த அம்மன் சிலை அசுரனை அழுத்திய நிலையில் தென்பட்டது.
தோன்றி எடுத்த சிலையிலும் அம்மனுக்கு வலது மேல்கரத்தில் ஒருவிரல் சிதைவு ஏற்பட்டு இருந்தது. அதனால் மக்களுக்கு இந்த தெய்வத்தை வழிபடுவதில் அச்சம் இருந்தது. அதன்பிறகு அன்று இரவும் அர்ச்சகருக்கு கனவில் அம்மன் தோன்றியது.
அர்ச்சகரிடம் அம்மன் உங்கள் வீட்டில் யாருக்கேனும் ஊனம் இது போன்றவை இருந்தால் அவர்களை தூக்கி எறிந்துவிடுவீர்களா என்று கனவில் அம்மன் கேட்டது. நான் இங்குள்ள மக்களை எல்லாம் காப்பாற்ற வந்த குலதெய்வம். அதனால் என்னை தயங்காமல் வணங்குங்கள் என்றது அம்மன்.
அதனால் அர்ச்சகரின் கனவில் அம்மன் இப்படி கூறியதால் கோவிலில் சிலை வைத்து அம்மனுக்கு பிரதிஷ்டை செய்ய முடிவு எடுத்தனர். அதனால் அன்று முதல் இன்றுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் அருகிலுள்ள மூக்குடி என்னும் கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த அம்மனையே காவல் தெய்வமாக போற்றி வணங்கி கொண்டு வருகின்றனர்.
கோவில் அமைப்பு:
வீரமாகாளி அம்மன் கோவில் வடக்கு நோக்கிய வாசலை கொண்டு அமைந்திருக்கும். இந்த கோவிலின் முன் பகுதி மிகவும் எளிமையான தோற்றத்தை உடையதாக இருக்கும்.
கோவில் மண்டபத்தின் வலது புறம் கருப்பசாமி மற்றும் விநாயகர் தெய்வங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோவில் கருவறை வாசலில் கற்களால் ஆன துவாரபாலகியர்கள் காவல்புரிகின்றனர்.
கோவிலின் இடது புறத்தில் விநாயகர், பெருச்சாளி வாகனம் போன்ற தெய்வங்கள் உள்ளன. எந்த கோவிலுக்கு சென்றாலும் நாம் முதலில் மரியாதை செய்வது விநாயகர் கடவுள் தான்.
வீரமாகாளி தோற்றம்:
அம்மன் சிரசில் மகுடத்தை தாங்கி, அம்மனின் வலது காலில் ஆண்களுக்கான நாகாபரணமும், இடது காதில் பெண்களுக்கான பாம்படம் என்னும் காதணியையும் அணிந்து காட்சி தருகிறாள்.
வீரமாகாளியின் வலது புறத்தில் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் போன்றவை வைத்துக்கொண்டும், இடது புறத்தில் கேடயம், அங்குசம், மணி, வரதம் போன்ற பொருள்களால் அருள் தருகிறாள்.
அம்மன் வலது காலை மடக்கிய நிலையில் இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், அசுரனை சூலத்தால் குத்திய நிலையில் இருக்கின்றாள்.
வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு..! |
திருமண தடை:
திருமணம் ஆகாதவர்கள் இருப்பார்கள். இந்த வீரமாகாளி அம்மன் திருமண தோஷம், திருமண தடை, உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால் நிச்சயமாக திருமண தடை, திருமண தோஷம் நீங்கும்.
திருமணம் நடக்க நினைப்போர் இந்த தெய்வத்தை நேரிலோ அல்லது ஆத்மார்த்தமாகவோ வேண்டி கொண்டால் சீக்கிரமே திருமணம் கைகூடும்.
இந்த கோவிலுக்கு வந்து வேண்டிய பிறகு நிச்சயமோ அல்லது திருமணமோ நடந்தபின் பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, திருமணம் ஆனவர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
தோஷம் நீங்க:
அது போல சிலருக்கு தோஷம் இருக்கிறது என்பார்கள். அதிலும் நாகதோஷம், புத்திரதோஷம் போன்ற தோஷம் உள்ளவர்களுக்கும் வீரமாகாளி வழி புரிகிறாள்.
தோஷம் நீங்கிய சாட்சிகளுக்காக கோவிலில் குழந்தை மண் பொம்மைகள் ஏராளமாக இருப்பதே இதற்கு சான்றாகும்.
குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து குழந்தை வரம் பெற்றபின் அந்தக் குழந்தையைக் அம்மனிடம் தத்துக் கொடுத்து, அதன்பிறகு மீண்டும் தெய்வத்திடம் இருந்து குழந்தையை பெற்று கொள்கின்றனர்.
அறந்தாங்கி வீரமாகாளி கோவில் தரிசன நேரம் / veeramakaliamman temple timings:
இந்த கோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை நடை திறந்து இருக்கும்.
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அப்போது பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யலாம்.
வீரமாகாளி கோவில் முகவரி / Aranthangi Temple Address:
புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது.
பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு..! |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |