பிறந்த நேரத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறியலாம்..!

Advertisement

பிறந்த நேரத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறியலாம்..! Birth Time Astrology in Tamil..!

ஒருவரை பற்றி அறிய வேண்டும் என்றால், அவர்களது நெருக்கமானவர்களை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்று எளிதாக அறிந்துவிட முடியும். அதேபோல் ஒருவரது ராசி நட்சத்திரம், லக்னம் போன்றவற்றை வைத்து கூறிவிடலாம். இது போன்று நிறைய விஷயங்கள் மூலம் ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறியலாம். நேரமும் காலமும் தான் ஒருவரை நல்லவராக வல்லவராக தீர்மானிக்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று நாம் பிறந்த நேரத்தை வைத்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளலாம். சரி வாங்க பிறந்த நேரத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எப்படி அறியலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை:

நீங்கள் அதிகாலை 12 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் பிறந்திருந்தால். நீங்கள் மிகவும் அறிவுத்திறன் உள்ளவராக இருப்பீர்கள். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதனை தெளிவாக கற்றுக்கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம எளிதாக பழகிவிடுவீர்கள். நீங்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பீர்கள்.

அதிகாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை:

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்கள். ஆடம்பரமான விஷயங்களை விரும்பக்கூடியவர்கள். நீங்கள் சிறந்த தொழிலதிபராக இருப்பீர்கள். சொல்வதை விட தன்னை செய்துகாட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள். இயற்கை காட்சிகளை அதிகமாக நேசிப்பவராக இருப்பீர்கள். மேலும் இவர்கள் வயதானாலும் இளமையுடன் காட்சியளிப்பீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்..!

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை:

நீங்கள் வலுமையான ஆளாக இருப்பீர்கள், அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். சவாலான விஷயங்களை கூட எளிதாக செய்துமுடிப்பவர்களாக இருப்பீர்கள். தனக்கான விஷயத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள். நேர்மையான மற்றும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள். தனது மனதில் இருப்பதை பட்டென பேசும் குணம் உள்ளவராக இருப்பீர்கள்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை:

இந்த குறிப்பிட்ட நேரங்களில் பிறந்தவர்கள், பிறப்பிலே தலைவர்களாகவும் சிறந்த பண்புகளுடன் காணப்படுவார்கள். எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் கடக்கும் திறன் உள்ளவர்கள். அடிக்கடி கோவப்படும் குணம் உள்ளவர்கள். எனவே, தங்களை அமைதியாக வைக்க அடிக்கடி முயற்சி செய்வார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement