இன்று சந்திர தரிசனம் எத்தனை மணிக்கு | Chandra Tharisanam Today Timing
Chandra Darshan Dates: வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள் மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் நாள் வரும் சந்திரனை (மூன்றாம் பிறை தரிசனம் 2025) அதாவது மூன்றாம் பிறை சந்திரனை பார்த்தால் நமக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முழுவதும் உள்ள சந்திர தரிசனம் (moondram pirai dates 2025 in tamil) எந்தெந்த நேரத்தில், எந்தெந்த கிழமைகளில் வருகிறது என்பதை பற்றி ஒவ்வொரு மாதத்திற்கும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
மூன்றாம் பிறை தெரியும் நேரம் 2025:
ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை ஆகும். அமாவாசைக்கு மறுநாள் சந்திரன் தெரியாது. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
இன்று சந்திர தரிசனம் எத்தனை மணிக்கு | மூன்றாம் பிறை நாட்கள் 2025
| சந்திர தரிசனம் நாள் | Chandra Darshan Dates 2025 | Chandra Tharisanam Today Timing |
| நவம்பர் 22, சனி | 05:39 PM to 06:18 PM |
| ஜனவரி 1, புதன் | 05:54 PM to 07:15 PM |
| ஜனவரி 30, வியாழன் | 06:09 PM to 07:00 PM |
| மார்ச் 1, சனி | 06:18 PM to 07:36 PM |
| மார்ச் 30, ஞாயிறு | 06:20 PM to 07:16 PM |
| ஏப்ரல் 28, திங்கள் | 06:23 PM to 07:01 PM |
| மே 28, புதன் | 06:31 PM to 07:59 PM |
| ஜூன் 26, வியாழன் | 06:39 PM to 07:43 PM |
| ஜூலை 26, சனி | 06:38 PM to 07:58 PM |
| ஆகஸ்ட் 24, ஞாயிறு | 06:25 PM to 07:11 PM |
| செப்டம்பர் 23 | 06:04 PM to 06:55 PM |
| அக்டோபர் 23, வியாழன் | 05:46 PM to 06:49 PM |
| நவம்பர் 22, சனி | 05:39 PM to 06:18 PM |
| டிசம்பர் 21, ஞாயிறு | 05:48 PM to 06:50 PM |
சந்திர தரிசனம் பலன்கள்:
சந்திர தரிசனத்தை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி கொள்வோம்.
- மன நிம்மதி கிடைக்கும்.
- ஆயுள் விருத்தி உண்டாகும்,
- வருமானம் அதிகரிக்கும்.
- செல்வம் அதிகரிக்கும்.
- பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள் நீங்கும்
- ஞாபக சக்தி அதிகரிக்கும்
- மனக்குழப்பம் நீங்கும்
- கண் பார்வை தெளிவாகும்
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை வணங்கினால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













