தாரா பலன் என்றால் என்ன..? மற்றும் தாரா பலன் அட்டவணை..!

Advertisement

Dhara Palan in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் ஆன்மிகம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள ஆன்மீக தகவல்களை அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் பார்க்க இருப்பது தாரா பலன் என்றால் என்ன..? இந்த தாரா பலன் எதற்காக பார்க்கப்படுகிறது. மற்றும் தாரா பலன் அட்டவணை போன்றவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். எனவே தாரா பலன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.

தாரா என்றால் என்ன..?

தாரை, தாரா போன்ற சொற்கள் யாவும் சந்திரனை பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கக்கூடியதாகும். சந்திரன் கோசார ரீதியாக தன்னுடைய பலாபலன்களை தாரை மூலமாக அவர் வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.

பொதுவாக ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது எப்பொழுதும் மாறக்கூடியது அல்ல. இப்பிறவியில் ஜென்ம நட்சத்திரம் என்பது ஒன்றேயாகும்.

ஆனால், மனோகாரகனான சந்திரன் தினம் தினம் வெவ்வேறு  நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திரன் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நட்சத்திரம் நட்பா? சாதகமா? சேமமா? அல்லது வதையா? விபத்தா? என்பதை அறிந்து செயல்படுவதே தாரா பலன் ஆகும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது வருகின்ற 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

நீங்கள் நினைத்த காரியம் நடக்க பேப்பரில் இந்த மாதிரி எழுதி வையுங்க

தாரா பலன் அட்டவணை:தாரா பலன் அட்டவணை

தாராபலம் அட்டவணை:

தாரைகள் பெயர்கள் தாரா பலன்
1. ஜென்ம தாரை மனக்குழப்பம் மற்றும் பதற்றத்தை தரும்.
2. சம்பத்து தாரை பொருள்வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை கோபத்தால் காரிய இழப்பு, வாய்ப்புகள் தவறுதல் போன்றவை உண்டாகும்.
4. சேமத் தாரை ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாள்
5. பிரத்தயக்கு தாரை சிக்கல்கள், கவனச்சிதறல், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும்.
6. சாதக தாரை எண்ணம் ஈடேறுதல், முயற்சிகள் பலிதமாகுதல் மற்றும் செயல்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
7. வதை தாரை உடலில் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலைகள், பணிகளில் நாட்டமில்லாமல் இருப்பது போன்றவை உண்டாகும்.
8. மைத்திர தாரை தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9. பரம மைத்திர தாரை அனைத்து சுபசெயல்களுக்கும்  உகந்தது.

தாரா பலன் பரிகாரம்:

ஜென்மத்தாரை- வாழைக்காய் / பூசணிக்காய்/காய்கறிகள் அவற்றில் ஏதாவது ஒன்றை தானம் செய்ய வேண்டும்.

விபத்தாரை- வெல்லம்/ லெமன் சாதம் தானம் செய்ய வேண்டும்.

பிரத்யகதாரை- உப்பு தானம்

வதைதாரை- எள் தானம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரிசி பானையில் இந்த பொருளை வைத்தால் போதும் வீட்டில் பணம் பலமடங்கு சேரும்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement