இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுமாம்..!

Advertisement

எந்த திசை நோக்கி சாப்பிட வேண்டும்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இன்றைய பதிவில் எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். இன்றைய காலத்தில் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால் வேலை, பணம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் கொடுப்பதில்லை. மேலும் சில நபர்கள் அமர்ந்து கொண்டு சாப்பிடுவதில்லை நின்று கொண்டும், நடந்து கொண்டும் சாப்பிடுகிறார்கள். நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது முக்கியமானது. வாங்க எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்..!

தெற்கு திசை:

தெற்கு திசை முன்னோர்களுக்கு உரிய திசையாக உள்ளது. அதனால் இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் செல்வத்தோடும், புகழோடும் இருப்பார்கள்.

கிழக்கு திசை:

கிழக்கு திசை அமர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் கல்வி அறிவு வளரும். உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கும். கிழக்கு திசை அமர்ந்து சாப்பிடும் போது சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுவது நல்லது.

மேற்கு திசை: 

மேற்கு திசை அமர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. உறவினர்கள் வீட்டில் சாப்பிடும் போது மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் பிரச்சனை உண்டாகும். அதனால் மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துடுங்கள்.

வடக்கு திசை:

 வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் தீராத நோய் ஏற்படும். அதனால் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துடுங்கள்.  

நீங்கள் எந்த நேரம் சாப்பிட்டாலும் உணவை தந்த கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாப்பிடுங்கள். இப்படி நன்றி செலுத்தினால் வீட்டில் பணத்திற்கு பிரச்சனை இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கலாம். மேலும் தினமும் நீங்கள் சாப்பிடும் உணவை காக்கை அல்லது வாயில்லா ஜீவனுக்கு கொடுப்பது நல்லது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement