கடனுக்கு மேல் கடன் வர என்ன காரணம் | Kadan Theera Vastu
ஒவ்வொரு மனிர்களுக்கும் தனக்காக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பார்கள். அப்படி அவர்களது லட்சியத்தை நிறைவேற்றி, புதிதாக கட்டிய வீட்டில் குடிபுகுந்து மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் வாழும்போது, வீடு கட்ட வாங்கிய கடன் உயர்ந்து, அந்த கடனுக்கு அந்த வீட்டையே விற்கும் நிலைமைக்கு பலர் தள்ளப்படுகின்றன. இவ்வாறு கடன் அதிகமாகுவதற்கு சில வாஸ்து அமைப்புகளும் காரணமாக இருக்கலாம். அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
கடன் பிரச்சனை தீர வாஸ்து | Kadan Theera Vastu
No: 1
உங்களுடைய வீட்டின் தென்மேற்கு பகுதியில் தெருக்கூத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருந்தால் வீட்டில் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
No: 2
உங்கள் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது.
No: 3
உங்கள் வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு பகுதியில் நுழைவாயில், கேட், கிணறு, ஆழ்துளை கிணறு, குளம் போன்ற அமைப்புகள் இருந்தால் கடன் தொல்லை அதிகரிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடன் அடைப்பதற்கான நல்ல நேரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..!
No: 4
மேலும், வடமேற்கில் கழிவு நீர்த்தொட்டி அமைக்கும்போது வீட்டை ஒட்டியோ அல்லது வீட்டிற்கு உள்ளே வரும் வகையில் இருந்தால் கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
No: 5
வீட்டின் போர்டிக்கோ அமைக்கும்போது பில்லர் போன்ற அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் இருப்பது. அப்படி போர்டிக்கோ அமைக்கும்போது வெட்டுப்பட்ட அமைப்புடன் வருவது கடன் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
No: 6
பூஜையறை வடகிழக்கு அல்லது தென்மேற்கில் வருமாறு அமைத்து இருப்பது.
No: 7
மேல் கூறப்பட்டுள்ள சில அமைப்புகளுடன் மேலும் சில தவறுகள் இருக்கும்போது வீட்டில் உள்ள ஆண்களின் வருமானத்தில் தடை, கடன் அதிகமாக இருப்பது போன்ற விளைவுகள் ஏற்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |