கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா? Kan Thudithal Palangal..!

கண் துடித்தால் என்ன பலன்..! Kan Thudippu Palan In Tamil..! Right & Left Eye Blink for Male & Female

Kan Thudipathu Karanam: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் கண்கள் துடித்தால் நல்லதா? கெட்டதா? என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாகவே அனைவருக்கும் கண்கள் சில நேரங்களில் துடிக்கும். கண்களில் இடது கண் துடித்தால் (Idathu Kan Thudithal) நன்மை நிகழ போகிறது என்றும், அதே வலது கண்கள் துடித்தால் (right eye blinking) தீயவை நடக்க போகிறது என்று நாமே முடிவு செய்து விடுகிறோம்.  கண் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. நம் கண்கள் துடிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், உடலில் புரதச்சத்து குறைபாடு, மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனை, போதை பழக்கம், உடல் சோர்வு, கண்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் வேலை கொடுப்பதால் கண்களின் ஓரத்தில் ஏற்படும் தசை அசைவு மற்றும் நரம்புகளும் கண்கள் துடிப்பதற்கு காரணம் என்று மருத்துவ ரீதியாக கூறுகின்றனர். கண்கள் துடிப்பதற்கு புராணங்களும், சங்க இலக்கியங்களிலும் சகுன பலன்கள் உள்ளன. சரி வாங்க இப்போது கண் துடித்தால் சாஸ்திரம் என்னென்ன பலன் கூறுகிறது என்று விரிவாக படித்தறியலாம். 

newகண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப்பு நிற்க வைத்தியம்..!

கண்கள் துடித்தால் என்ன பலன்: 

Kan Thudipathu Karanam

வலது புருவம் துடித்தால் என்ன பலன்: பண பற்றாக்குறை நீங்கி குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும்.

இடது கண் புருவம் துடித்தால் என்ன பலன்: இடது கண் புருவம் துடித்தால் குழந்தையின்மை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தமாகும். மறுபுறம் சோகமான நிகழ்வும் ஏற்படலாம்.

புருவ மத்தி துடித்தால் என்ன பலன்: புருவ மத்தியானது துடித்தால் நமக்கு பிடித்தவர்களுடன் இருப்பது போன்ற வாய்ப்பு ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கண் நடுப்பாகம் துடித்தால் என்ன பலன்: கண் நடுப்பாகம் துடித்தால் மனைவியை பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும். 

வலது கண் துடித்தால் என்ன பலன்: வலது கண் துடித்தால் நாம் நினைத்த செயல்கள் வெற்றியில் முடியும். 

வலது கண் துடிப்பதன் வரலாறு கதை கூறும் எடுத்துக்காட்டு:

எடுத்துக்காட்டு 1: போர்க்களத்தில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் யுத்தம் ஒன்று ஏற்படுகிறது.அந்த கடும் யுத்தத்தின் இறுதியில் பீமன் கதாயிரத்தால் துரியோதனின் தொடையில் அடித்து அவருடைய கால்கள் முறிந்த நிலையில் இருக்கிறது. 

கால்கள் முறியும் சமயத்தில் காந்தாரியின் வலது கண் துடிக்கிறது. வலது கண் துடிக்கும் நேரத்தில் அவள் மனதில் ஏதோ தீய செயல் நடக்கப்போகிறது என்று பதற்றம் அடைகிறாள்.

எடுத்துக்காட்டு 2: கோவத்தில் கோவலனை கொள்ளுமாறு மன்னர் நெடுஞ்செழியன் உத்தரவு அளிக்கிறார். அந்த சமயத்தில் கண்ணகிக்கு வலது கண் துடித்தது.

பெண்களுக்கு வலது கண் துடித்தால் தீமை எனவும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதுதான் நன்மை என சகுன சாஸ்திரம் கூறுகிறது.

newபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..!

 

இடது கண் துடித்தால் என்ன பலன் / idathu kan thudithal enna palan in tamil: இடது கண் துடித்தால் மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய நிலை வரும். மேலும் சோகம் ஏற்படும்.

இடது கண் துடிப்பதன் வரலாறு கதை கூறும் எடுத்துக்காட்டு:

வாலியை வீழ்த்துவதற்காக இராமனுடன் நட்பு கொள்கிறார் சுக்ரீவன். இராமரின் மீது அதிக அன்பு இருப்பதால் இராமர் கைகளை கெட்டியாக பிடித்தவாறு இருக்கிறான். இனி வரும் காலத்தில் இன்பமோ, துன்பமோ உன்னை விட்டு நீங்காமல் உனக்காக வாழ்வேன் என்று சுக்ரீவன் கூறுகிறான். அந்த சமயத்தில் அசோக வனத்தில் இருந்த சீதைக்கு இடது கண் துடிக்கின்றது. அதே நேரத்தில் வாலிக்கும், இராமருக்கும் இடது கண் துடிக்கின்றது.

சகுன சாஸ்திரப்படி பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை எனவும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் தீமை எனவும் சாஸ்திரம் கூறுகிறது. 

வலது கண் இமை துடித்தால் என்ன பலன்: வலது கண் இமை துடித்தால் மிகவும் சந்தோசமான செய்தி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

இடது கண் இமை துடித்தால் என்ன பலன்: இடது கண் இமை துடித்தால் வருதத்திற்குரிய செயல் ஏதேனும் நடக்கப்போகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. 

வலது கண் கீழ் இமை துடித்தால் என்ன பலன்: வலது கண் கீழ் இமை துடித்தால் அடுத்தவர் செய்த பழியினை தாம் சுமக்க நேரிடும்.

இடது கண் கீழ் இமை துடித்தால் என்ன பலன்: இடது கண் கீழ் இமை துடித்தால் கைகளில் பணவரவு தங்காமல் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்