ஜூன் 7-ம் தேதி புதன் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.. இதனால் 5 ராசிகளுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வரும்..

Mercury will move to Taurus and this will cause more problems to the 5 zodiac signs in tamil

ரிஷப ராசி புதன் பெயர்ச்சி

வருகின்ற ஜூன் 7-ம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஆதித்ய ராஜ யோகம் உருவாகிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் எல்லாம் ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளை வழங்கும். பித்னா பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு மட்டும் தொழில் மற்றும் நிதிநிலைமையில் பிரச்சனை ஏற்படும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஏற்பட போகிறது:

தனுசு:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி பெரிய பிரச்சனையை ஏற்படுத்த போகிறது. இந்த காலம் உங்களுக்கு ரொம்ப கஷ்ட காலமாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க முடியாது. செலவுகளை சமாளிப்பதற்கே கசன் வாங்குவீர்கள். அதனால் பண விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

துலாம் ராசி

புதன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் கவனமாக பணியாற்ற வேண்டும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் நினைத்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியாது. வியாபாரம் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்மம் ராசி

புதன் பகவான் ரிஷபம் ராசியில் நுழையும் இந்த நேரமானது உங்களுக்கு உகந்ததாக இருக்காது. நீங்கள் இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் பார்த்து செலவு செய்ய வேண்டும். முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த ராசிக்கார நண்பர்கள் ஜூன் 15 வரை பொறுத்துக்கொள்ளுங்கள் நல்ல காலம் தேடி வருகிறது 

மிதுனம்:

மிதுனம் ராசி

புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் உங்களின் செயலுக்கான பாராட்டு கிடைக்காது. வியாபாரத்தில் லாபத்தை பார்க்க முடியாது. உங்களின் துணையுடன் பிரச்சனை ஏற்படும். உங்களின் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் அதனை பார்ப்பது நல்லது.

மேஷம்:

மேஷம்

புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் நீங்கள் எந்த செயலிலும் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணிகள் அதிகமாக இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். வீட்டில் சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும், இதனால் கவலை அடைவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

புதன் ரிஷபத்தில் அமர்வதால் ஜூன் 7 முதல் கொட்டோகொட்டுனு கொட்டப்போகிறது  யாருக்கு தெரியுமா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்