மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021- 2022 | Mithun Rashi Guru Peyarchi

Mithun Rashi Guru Peyarchi

மிதுனம் – Guru Peyarchi Palangal 2021 – 2022 

Mithunam Guru Peyarchi 2021: நாம் காலையில் எழுந்தவுடன் நினைப்பது நமக்கு இன்று என்ன நல்லது நடக்கும், அதற்கு நாம் காலண்டர், தொலைக்காட்சி என அனைத்திலும் நம் ராசிக்கு என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம். அப்படி தினம்தோறும் ராசி பலன்களை பார்க்கும் நாம் வருடத்திற்கு ஓரு முறை மாறும் குரு பெயர்ச்சியை மட்டும் பார்க்க தவறுவோமா என்ன? அந்த வகையில் நாம் இந்த பதிவில் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி இந்த வருடம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

மிதுனம் – குரு பெயர்ச்சிப் பலன்கள் | Guru Peyarchi 2021- 22 Mithunam

 Mithun Rashi Guru Peyarchi

கடந்த காலத்தில் குருபகவான் 8-ம் இடத்தில் ஆட்சி செய்தார் இப்போது 13.11.2021 அன்று திரிகோணஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி அமோகமான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மன மகிழ்ச்சி அதிகரித்து உற்சாகம் நிறைந்து காணப்படுவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடந்த காலத்தில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். மேலும் உங்களை ஆட்டிப்படைத்த அஷ்டம சனி, கண்டக சனி அனைத்தும் விலகும்.

மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் – ஆரோக்கியம்:

  • ஆரோக்கியம் பொறுத்தவரை உடல் நலம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. உற்சாகம் நிறைந்து காணப்படுவீர்கள். மன கவலைகள் நீங்கி ஆற்றல் நிறைந்து காணப்படும். நீண்ட நாள்களாக இருந்த உடம்பு வலி, வயிற்று வலி அனைத்தும் சரியாகி ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தொழில் – Mithunam Guru Peyarchi 2021:

  • தொழில் உத்தியோகம் பொறுத்தவரை வியாபாரம், பணிகள் வளர்ச்சி நிறைந்து காணப்படும். பணவரவு அதிகரிக்கும். தொழில் சம்மந்தமான பிரச்சனைகள் விலகும். லாபம் அதிகரித்து உங்கள் புகழ் உயரும். குரு பகவான் 9-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து காணப்படும். கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும்.

பணியிடம் – Guru Peyarchi 2021 to 2022 Mithunam

  • பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் இருந்து வந்த சங்கடங்கள் விலகி பணியிட சூழல் சாதகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் பணியில் கவுரவம், புகழ் உயரும்.
  • சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை உயரும்.

குடும்ப உறவு – Mithunam Guru Peyarchi 2021:

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு மகப்பேறு அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை செல்வம் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் இருந்த சங்கடங்கள் விலகி நல்லிணக்கம் அதிகரிக்கும்.
  • உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளின் நலன் நன்றாக இருக்கும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

திருமணம்:

  • திருமணம் நடைபெறுவதற்கு கால தாமதமான ஆண்/ பெண் இருவருக்கும் திருமணம் சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் திருமணத்திற்க்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் – Mithuna Rasi Guru Peyarchi 2021 to 2022 Tamil:

  • வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். உங்களுடைய வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்.

மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் – கல்வி:

  • மாணவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகவும் நன்றாக உள்ளது. தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்று முதலிடம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 Simmam

பரிகாரம் – மிதுனம் குரு பெயர்ச்சி 2021:

  • விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை வணங்க வேண்டும். ஏழைப்பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கி கொடுத்து திருமணம் நடத்தினால் செல்வ வளம் பெருகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்