வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

Advertisement

மணி பிளான்ட் செடி எந்த திசையில் வைக்கலாம் | Money Plant Vastu in Tamil

Money Plant Vastu in Tamil – வணக்கம் நண்பர்களே.. பொதுவாக பலரது வீட்டில் மணி பிளான்ட் செடி இருக்கும். ஆனால் அந்த செடியை எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம், எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் அன்று தெரிந்திருக்கிறது. ஆக அவற்றை தெரியப்படுத்தவே இந்த பதிவு. பொதுவாக மணி பிளான்ட் பொதுவாக தன ஆசனங்களை தரக்கூடிய செடி என்று சொல்லலாம். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த செடிக்கு நேர்மறையான ஆற்றல்கள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆக இந்த செடியை நம் வீட்டில் வைத்து வளர்த்தால் நாம் நேர்மறையான ஆற்றல்களை பெற முடியும். சரி இந்த செடியை எந்த திசையில், எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

செல்வம் பெருக மணி பிளான்ட் எந்த திசையில் வைக்க வேண்டும்?

மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசையில் தான் அதிகம் நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென் கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement