Palli Satham Podum Palan | பல்லி சொல்லும் பலன் கிழமை
அனைவரின் வீட்டிலும் பல்லி இருக்கும். இந்த பல்லி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு திசையில் இருக்கும். இது எங்கிருந்து சத்தம் போட்டாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு. அதேபோல் முக்கியமாக நாம் நல்ல விஷயம் பேசும் போது சத்தம் போட்டால் உடனே அதற்கு சம்மதம் என்றும் நல்ல சகுனம் என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல் ஏதாவது யோசனையாக ஒரு விஷயம் பேசும்போது அதற்கும் பல்லி சத்தம் மிட்டால் உடனே கெட்ட சகுனம் என்று சொல்வார்கள். ஆகவே இந்த பல்லி எந்த திசையில் சத்தம் மிடுகிறது அதற்கு என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் லீங்கை கிளிக் செய்து பாருங்கள். அதேபோல் முக்கியமாக எந்த கிழமையில் எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.!
ஞாயிற்றுகிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – பயம்
- மேற்கு திசை – சண்டை
- தெற்கு திசை – சுபம்
- வடக்கு திசை – திரவியம் லாபம்
- தென்கிழக்கு திசை – தீமை
- தென்மேற்கு திசை – பந்து வரவு
- வடமேற்கு திசை – வஸ்திர லாபம்
- வடகிழக்கு திசை – லாப சமாசாரம்
- ஆகாயம் – ஐயம்
- பூமி – காரியம் அனுகூலம்
திங்கட்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – திரவியம் லாபம்
- மேற்கு திசை – ராஜ தரிசனம்
- தெற்கு திசை – சத்ரு வரவு
- வடக்கு திசை – வஸ்திர லாபம்
- தென்கிழக்கு திசை – கலகம்
- தென்மேற்கு திசை – விரோதம்
- வடமேற்கு திசை – துக்கம்
- வடகிழக்கு திசை – மங்க வார்த்தை
- ஆகாயம் – கேடு
- பூமி – திரவியம்
செவ்வாய்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – சம்பத்து
- மேற்கு திசை – அனுகூலம்
- தெற்கு திசை – விசனம்
- வடக்கு திசை – சத்துரு பயம்
- தென்கிழக்கு திசை – வரவு
- தென்மேற்கு திசை – சத்துரு பயம்
- வடமேற்கு திசை – துக்கம்
- வடகிழக்கு திசை – வாகனம்
- ஆகாயம் – பயணம்
- பூமி – திரவிய லாபம்
புதன்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – சந்தோசம்
- மேற்கு திசை – பயம்
- தெற்கு திசை – பீடை
- வடக்கு திசை – சுபம்
- தென்கிழக்கு திசை – திரவிய லாபம்
- தென்மேற்கு திசை – மரணம்
- வடமேற்கு திசை – திரவிய நாசம்
- வடகிழக்கு திசை – நஷ்டம்
- ஆகாயம் – நல்ல வார்த்தை
- பூமி – ஐஸ்வர்யம்
பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா
வியாழக்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – அசுபம்
- மேற்கு திசை – கஷ்டம்
- தெற்கு திசை – திரவியம் லாபம்
- வடக்கு திசை – தீமை
- தென்கிழக்கு திசை – மரணம்
- தென்மேற்கு திசை – காரிய சித்தி
- வடமேற்கு திசை – நல்ல வார்த்தை
- வடகிழக்கு திசை – சுபம்
- ஆகாயம் – கலகம்
- பூமி – கலகம்
வெள்ளிக்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – சுபம்
- மேற்கு திசை – சந்தோசம்
- தெற்கு திசை – தரிசனம்
- வடக்கு திசை – கலகம்
- தென்கிழக்கு திசை – அலங்காரம்
- தென்மேற்கு திசை – நல்ல வார்த்தை
- வடமேற்கு திசை – கலகம்
- வடகிழக்கு திசை – சத்துரு பயம்
- ஆகாயம் – பொருள் வரவு
- பூமி – சூதக ஸ்நானம்
சனிக்கிழமை எந்த திசையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்:
- கிழக்கு திசை – வெது வார்த்தை
- மேற்கு திசை – வஸ்திரம்
- தெற்கு திசை – ராஜ தரிசனம்
- வடக்கு திசை – சமாசாரம்
- தென்கிழக்கு திசை – திரவிய லாபம்
- தென்மேற்கு திசை – துரோகம்
- வடமேற்கு திசை – ஸ்திரி யோகம்
- வடகிழக்கு திசை – திருடர் வரவு
- ஆகாயம் – காரிய நஷ்டம்
- பூமி – காரிய சித்தி.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |