உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம் இருக்கும் இடத்தில் வையுங்கள்

Advertisement

உங்கள் கையில் பணம் அதிகமாக புரள இதை மட்டும் செய்யுங்கள்..!

Panam Peruga Tips – வணக்கம் நண்பர்களே.. இன்றைய கால கட்டத்தில் பலருக்கு பணம் பிரச்சனை இருக்கிறது. என்னதான் சம்பாரித்தலும் காசு கையில தங்கமாட்டேன்குதுன்னு நிறையபேர் சொல்லி நேரிலேயே நாம் பார்த்திருப்போம். இருப்பினும் நமது கையில் அதிக பணம்  புரள வேண்டும் என்றால் கண்டிப்பா சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அப்படி அந்த விஷயங்களை கடைபிடித்தாலே போதும். அதிலும் பணத்தை அதிகளவு ஈர்க்க கூடிய பொருட்களை வைத்தாலே போதும் உங்களுக்கு ஏற்படும் பணம் விரயங்களை தடுத்து, பணம் வரவை அதிகரித்து கொடுக்கும். சரி வாங்க அந்த பொருட்கள் என்ன. அதனை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பணம் வரவை அதிகரிக்க பரிகாரம்:

பொதுவாக 10,000 ரூபாய் சம்பாரிக்கும் போது எவ்வளவு செலவுகள் இருந்ததோ அதைவிட அதிகமாக செலவு 20,000 ரூபாய் சம்பாரிக்கும்போது இருக்கிறது. இது பணத்திற்குரிய சாபம் என்று சொல்லலாம். பொருளாதாரம், விலையேற்றம், தேவை அப்படின்னு மனிதர்களுக்கு பணம் என்பது நினைத்ததைவிட அதிகமாகவே செலவாகிறது. தேவையே இல்லாமல் செலவாகும் பணத்தை, பணம் ஈர்ப்பு விசைகளின் மூலமாக சரி செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம்.

வாசனை நிறைந்த பொருள்களுக்கு பொதுவாக பணத்தை ஏற்கும் சக்தி இருக்கிறது. ஆக அந்த வாசனை பொருட்களை வைத்து ஒரு பரிகாரத்தை இப்பொழுது நாம் பார்த்துவிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • சுத்தமான வெள்ளை துணி – சிறிய துண்டு
  • கிராம்பு – மூன்று
  • ஏலக்காய் – மூன்று
  • பச்சை கற்பூரம் – மூன்று
  • மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

வெள்ளை துணியை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மேல் கூறப்பட்டுள்ள ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை வைத்து சிறிய முறையாக கட்டிக்கொள்ளுங்கள். மூட்டை கட்டும்பொழுது மஞ்சள் நிறத்தில் உள்ள நூலில் தான் மூட்டை கட்ட வேண்டும்.

இந்த மூட்டையை ஆண்கள் உங்கள் பணிபர்ச்சில் வைத்துக்கொள்ளலாம், பெண்கள் உங்கள் ஹாண்ட் பேக், பர்ஸ் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். பிறகு பணம் எங்கு எல்லாம் வைப்பீர்களோ அங்கு எல்லாம் இது போன்ற மூட்டைகளை தயார் செய்து வைக்கலாம். கல்லாப்பெட்டி, நகை பெட்டி, பிரோல், சமையல் அறையில் அஞ்சறை பெட்டியில் கூட வைக்கலாம்.

இவ்வாறு வைப்பதினால் பணம் விரையான்கள் தடுக்கப்படுகிறது, பின் பணம் வரைவை அதிகரிக்கிறது. இதை மட்டும் செய்துகொள்ளுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement