பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!

Advertisement

Panguni Uthiram Viratham in Tamil

மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம். இந்த பங்குனி உத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் நன்மையை அளிப்பார். அதோடு மட்டுமில்லாமல் நாளைய நாள் அதாவது பங்குனி உத்திரம் அன்று ஐந்து முருகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் ஆராதனை செய்வார்கள். ஆகவே பக்கத்திலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அதற்கு முன்பு பங்குனி உத்திரம் அன்று நினைத்தது நடக்க இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள்..!

Panguni Uthiram Viratham in Tamil:

 panguni uthiram 2023 tamil

இந்த விரத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடைபிடிக்கலாம். இதை பெரியவர்கள் மட்டும் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை.

முதலில் காலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் விளக்கு ஏற்றி மனதில் முருகப்பெருமானை நினைத்து வணங்க வேண்டும்.

காலையில் குளித்த பின்பு விரத்தை தொடங்கிவிடவேண்டும். பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதேபோல் எந்த சாமியும் உங்களை வருத்திக்கொண்டு விரதம் எடுக்க சொல்லவில்லை. ஆகவே வயதானவர்கள், குழந்தை உங்களால் முடிந்தளவு இருந்தால் போதுமானது. அதேபோல் வயதானவர்கள் விரதம் எடுத்தார்கள் என்றால் பால், ஜூஸ், பழங்கள் என எடுத்துக் கொள்ளவேண்டும்.

பங்குனி உத்திரம் 2024 தேதி | பங்குனி உத்திரம் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

அன்றைய நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம் சொல்லவேண்டும். வேலைக்கு செல்பவர்கள் என்றால் ஓம் சரவண பவ என்று உச்சரிக்காலம். அதேபோல் மனதில் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கவேண்டும்.

காலை முதல் மாலை வரை விரதம் எடுப்பவர்கள். மாலை நேரத்தில் முருகன்  கோவிலில் சென்று தரிசித்துவிட்டு அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்துகொள்ளலாம்.

Panguni Uthiram Viratham Palangal:

 panguni uthiram 2023 tamil

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்தால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.  அதேபோல் திருமணம் ஆகாதவர்களுக்கு விரையில் திருமணம் ஆகும். அதேபோல் நல்ல வரன் கைகூடும்.

திருமணம் ஆகியும் இருவரின் மனநிலையும் ஒற்றுக்கொள்ளமால் மனஸ்தாபங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த விரத்தை கடைபிடித்தால் இருவரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் குழப்பம் தீரும்.

யார் ஒருவர் 48 வருடம் பங்குனி உத்திரம் விரதம் கடைபிடிக்கிறார்களோ அவர்களின் மறுபிறவி தெய்வப்பிறவியாக இருக்கும்.

விரத்தை மேற்கொண்டால் கல்வி, பணிகள், தொழில் என அனைத்திலும் நல்ல நிலைக்கு வருவீர்கள். அதேபோல் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் 2023 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement