புத்தாண்டு பலன்கள் 2024..! Puthandu Rasi Palan 2024..!
ஆங்கில புத்தாண்டு ராசி பலன் பலன்கள்: வணக்கம் நண்பர்களே..! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2024-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் 12 ராசியினருக்கும் நடைபெறவிருக்கும் புத்தாண்டு பலன்களை இந்த பதிவில் பார்ப்போம். வருகிற 2024-ஆம் ஆண்டு நமக்கு எப்படி இருக்க போகிறது என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். புதிய ஆண்டு நம்பிக்கை மட்டுமல்லாமல் சிலருக்கு பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக அமையும். அந்த வகையில் வரவிருக்கும் 2024-ம் ஆண்டு 12 ராசியின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன் 2024 (puthandu palangal 2024 in tamil) எப்படி அமைந்திருக்கிறது என்று இப்போது படித்தறியலாம் வாங்க..!
புத்தாண்டு ராசி பலன் 2024 – New Year Rasi Palan
புத்தாண்டு பலன்கள் 2024மேஷம் / Mesha Rasi Puthandu Palan 2024:
மேஷ ராசி 2024 எப்படி இருக்கும் – மேஷ ராசியினருக்கு 2024-ஆம் ஆண்டானது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று பலநாள் நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆண்டு அது நிறைவேறும். சமுதாயத்தில் தங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். உங்களுடைய ராசியில் சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வருடத்தில் வியாபாரம் சூடுப்பிடித்து காணப்படும். படித்து முடித்து அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் சில சாதகமான பலன்களை தரப்போகிறது.
2024 புத்தாண்டு பலன் ரிஷப ராசி / Rishaba Rasi Puthandu Palangal 2024:
ரிஷப ராசி 2024 எப்படி இருக்கும் : ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணிப்பதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக மாறப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த ஆண்டில் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த ஆண்டில் அரசு சம்பந்த வேலைகளுக்கு தாராளமாக முயற்சி செய்யலாம். ராகு ஜென்ம ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மனதளவில் இதுவரை இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ராகு கேதுவால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
மிதுன ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Puthandu Palangal 2024 Mithunam:
Year Rasi Palan 2024 – வருகிற 2024-ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு குருவினுடைய பார்வை உங்களுக்கு பல யோகத்தை கொடுக்கப்போகிறது. மாணவர்கள் இதுவரை கல்வியில் மந்தமாக இருந்த நிலை மாறி கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது. புதிதாக வேலைக்கு முயற்சிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்தடையும். இதுவரை மனதில் இருந்து வந்த அனைத்து குழப்பங்களும் நீங்கி மனதில் நல்ல தெளிவு கிடைக்கும். சில மாதங்கள் அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை தோறும் சென்று வழிபட்டு வரலாம்.
கடக ராசி புத்தாண்டு பலன் 2024 / Kataka Rasi Puthandu Palan 2024:
கடக ராசி 2024 எப்படி இருக்கும் – கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டில் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் குருவினுடைய பார்வை சாதகமான பலன்களை கொடுக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குறிப்பாக இந்த ஆண்டு தங்களுக்கு பணவரவு மனம் நிறைந்ததாக இருக்கும்.
சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Simha Rasi Puthandu Palangal 2024:
சிம்ம ராசி 2024 எப்படி இருக்கும்: சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2024 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருவின் பார்வை சிம்ம ராசியினருக்கு சாதகமாக உள்ளது. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக சிறந்து விளங்கும். சிறிய அளவில் தொடங்கும் முயற்சிகள் பெரிய அளவிற்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். இதனால் மனதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தகுதிக்கு ஏற்றவாறு வேலை இல்லாதவர்களுக்கு வேலை அமையும்.
கன்னி ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Kanni Rasi Puthandu Palangal 2024:
கன்னி ராசி 2024 எப்படி இருக்கும் :அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2024-ஆம் ஆண்டு சோதனைகள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. குருவின் பார்வை நேரடியாக உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. பணியிடத்தில் சக ஊழியர்களால் இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் விலகும். ஒரு சிலருக்கு புதிதாக வேலை கிடைக்கக்கூடும். சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் கடன் தொல்லைகள் நீங்கும். இதுவரை பகைவருடன் இருந்து வந்த பிரச்சனைகளும் முடிவிற்கு வரும். படிக்கும் மாணவர்கள் தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Thulam Rasi Puthandu Palan 2024/ New Year Rasi Palan 2024:
துலாம் ராசி 2024 எப்படி இருக்கும்:- துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் 2024 ஆண்டு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலையில் புதிய மாற்றம் கிடைக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த திருமணத்தடை நீங்கி திருமணம் கைக்கூடும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு இந்த ஆண்டு தொட்டது துலங்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.
விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Puthandu Rasi Palan 2024 Viruchigam:
new year rasi palan 2024/ 2024 puthandu rasi palan:- விருச்சிகம் ராசிக்காரர்களே 2024-ஆம் ஆண்டில் உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. இனி உங்களுக்கு எல்லாம் வெற்றிதான். இதுநாள் வரை இருந்த அனைத்து கஷ்டங்களும் விலகும். ஜென்ம கேது ஏழாமிடத்து ராகுவினால் நிறைய தொல்லைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வந்த உங்களுக்கு குரு சனியால் எந்த தொந்தரவும் கிடையாது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும். மனதிற்கு விரும்பிய வாழ்க்கை கைக்கூடி வரும். ஒரு சிலருக்கு இரண்டாம் திருமணம் நிட்சயமாகும். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் இப்போது சிறந்தக்கல்வி நிலையை அடைவார்கள். நீங்கள் மனதில் நினைத்த காரியம் அனைத்தும் இந்த 2024-ம் ஆண்டில் நிறைவேறும்.
தனுசு ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Dhanusu Rasi Puthandu Palangal 2024:
Year Rasi Palan 2024:- குரு பகவானை ராசி நாதனானக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, ஏழரை சனியில் இதுவரை மாட்டி தவித்தவர்களுக்கு மனதில் உள்ள அனைத்து கவலைகளும் நீங்கும். பிறக்கப்போகும் புத்தாண்டில் குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார். ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கேது லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி அடையப்போவதால் உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஒரு சிலருக்கு உங்களை தேடி வெளிநாட்டு வேலை வரும். இந்த ஆண்டு உங்களுக்கு திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மகர ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Makara Rasi Puthandu Palan 2024/ puthandu palangal 2024 in tamil:
இந்த புத்தாண்டில் அனைத்து சங்கடங்களும் நீங்கி சாதனை புரியும் ஆண்டாக மாறப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவானும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. பணியிடத்தில் இருந்து வந்த டென்ஷன், குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத அளவிற்கு வருமானம் அதிகரித்து காணப்படும். நீங்கள் செய்யும் வேலைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இந்த வருடம் வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் நீங்கி லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும். உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகமாக கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்ப ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Kumba Rasi Puthandu Palan 2024:
Year Rasi Palan 2024/ புத்தாண்டு ராசி பலன்கள் 2024:- கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு குடும்ப குரு என மாறி மாறி அமைகிறது. பணியிடத்தில் பணிக்காக வெளி அலைச்சலும், பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் தேவையில்லாத பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். காதல் விவகாரங்களில் ஆண்டின் முற்பகுதியில் தடைகள் ஏற்படலாம். இந்த ஆண்டு வருமானம் அதிகரித்து காணப்படும். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வீடு சொத்து வாங்க இது ஏற்ற தருணம் அல்ல. வண்டி வாகனம் வாங்க சரியான நேரம் அல்ல. இந்த குல தெய்வ வழிபாடு குடும்பத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
மீன ராசி புத்தாண்டு பலன்கள் 2024 / Meena Rasi Puthandu Palangal 2024:
Year Rasi Palan 2024/ புத்தாண்டு ராசி பலன்கள் 2024:- 2024-ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு விரைய குருவாக இருந்து அதிசாரமாக ஜென்ம குருவாக மாறுகிறார். ராகு இரண்டாவது வீட்டிலும், கேது எட்டாவது வீட்டிலும் பயணம் செய்வதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். இந்த ஆண்டு உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யப்போவதால் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிதாக முதலீடுகள் செய்தால் அதில் நிதானம் தேவை. வருட பிற்பகுதியில் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். பல வருடமாக குழந்தைக்கு தவமாக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் இந்த வருடம் கிடைக்கும். இந்த ஆண்டில் பல தடைகளையும் கடந்து முன்னேற்றம் அடைவீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |