சனி பெயர்ச்சி பலன் 2023
ஒவ்வொரு வருடமும் ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி ஆனது நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பெயர்ச்சி ஆனது ஆண்டுதோறும் நடந்தாலும் கூட ராசி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் வெவ்வேறு பலனை அளிக்கிறது. அதுமட்டும் இல்லமால் நம்முடைய செயலை பொறுத்தே நமக்கான பலன்களை சனி பகவான் கொடுப்பார் என்பது ஒரு கருத்தாக இருக்கிறது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் தான் அந்தந்த ராசிக்கு அளிக்கிறார். அந்த வகையில் சனி நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிகளில் 5 ராசிகள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகையால் அத்தகைய 5 ராசி எது எதுவென்று விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ராகு கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..
Sani Peyarchi Palan 2023:
காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளில் கடக ராசி, சிம்ம ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசி மற்றும் மீன ராசி ஆகிய 5 ராசிகள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகையால் அதற்கான பலன்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிம்ம ராசி:
கலாச்சாரத்தில் சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டது தான் சிம்ம ராசி. இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி காரணமாக இனி வரும் காலங்கள் கொஞ்சம் சிக்கலை தரக்கூடிய காலமாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
ஆகையால் எந்த செயலிலும் நிதானத்துடன் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் பண விஷயத்தில் தேவையில்லாமல் நுழையாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
கும்ப ராசி:
11-வது ராசி என்றால் அது கும்ப ராசி தான். இந்த முறை சனி பகவான் கும்ப ராசியில் தான் சஞ்சரிக்கிறார். ஆகையால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் மற்றும் அடிக்கடி உடல்நல குறைபாடு இருக்கும். அதனால் இவற்றை நினைத்து கவலை கொள்ளாமல் இனி வரும் காலங்களில் கும்ப ராசிக்காரர்கள் தைரியமாக இருத்தல் வேண்டும்.
குரு பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்… அப்போ உங்க ராசி என்னா ராசி.. |
கடக ராசி:
ராசியில் 4-வதாக அமைந்துள்ள கடக ராசிக்காரர்களுக்கு உடல் நலக்குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கடக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் அதனுடைய தாக்கமும் சேர்ந்து இருக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் கடன் வாங்குவது, தேவையற்ற செலவு போன்றவற்றினையும் கடக ராசிக்காரர்கள் குறைத்து கொள்ள வேண்டும்.
மீன ராசி:
ராசியில் கடைசி ராசியாகவும் மற்றும் மீன் போன்ற அமைப்பினையும் கொண்டது தான் மீன ராசி. இத்தகைய மீன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சற்று சீரான பலன்களை அளிக்க உள்ளதாக இருக்கிறது.
மேலும் மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எந்த செயலையும் யோசித்து செய்ய வேண்டும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
விருச்சிக ராசி:
விருச்சக ராசிக்கார்களுக்கு இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி காரணமாக மிதமான பலன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது மற்றும் அலுவகத்தில் அனுசரித்து செல்வது போன்ற அனைத்தும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |