கந்த சஷ்டி விரதம் 2026 | Sashti Viratham 2026 Dates and Time Tamil
Sashti 2026 / Sasti Viratham 2026 Dates: நண்பர்கள் அனைவர்க்கும் பொதுநலம்.காம்-ன் வணக்கம்..! இன்றைய பதிவில் 2026-ஆம் ஆண்டு முழுவதும் உள்ள ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் சஷ்டி விரதம் எந்தெந்த கிழமைகளில் வருகிறது என்று பார்க்கலாம். தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து எடுக்கும் முக்கிய விரதத்தினுள் ஒன்று தான் இந்த சஷ்டி விரதம்.
கிரக நிலைகளில் செவ்வாய்க்கு அதிபதியான கடவுளாக கருதப்படுகிறார் முருகப்பெருமான். இந்த சஷ்டி (Shasti) விரதமானது செவ்வாய் கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அந்த நாளில் முருகனுக்கு விரதம் எடுத்து செயல்படுவது நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றி அடையும். சரி இப்போது 12 மாதங்களில் வளர்பிறையில் உள்ள கந்த சஷ்டி விரதம் எந்தெந்த கிழமைகளில் (sasti viratham 2026 dates) வருகிறது என்று படித்தறியலாம்..!
முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்:
ஸ்கந்த ஷஷ்டி அல்லது கந்த சஷ்டி என்று கூறுவார்கள். இந்த நாளானது முருகனுக்கு உரிய நாளாக இருக்கிறது.வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என முருகர் பக்தர்கள் சஷ்டி திதிகளில் விரதம் இருந்து அவரை வணங்குவார்கள்.
மேலும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாளாக இருக்கிறது. கார்த்திகை, பூசம், விசாகம் போன்ற நட்சத்திரங்களும் முருக பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக இருக்கிறது. இந்த சஷ்டி நாட்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை வரம் கேட்டு தான் விரதம்இருப்பார்கள். ஆனால் முருகனிடம் என்ன நினைத்து மனமுருகி வேண்டி கொள்கிறமோ அதற்கான அருள் அவரிடம் இருந்து கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
கந்த சஷ்டி விரதம் 2026 ஆரம்பம் | வளர்பிறை சஷ்டி விரதம்
| கந்த சஷ்டி ஆங்கில தேதி | விரதம் |
| ஜனவரி 09 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| ஜனவரி 24 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| பிப்ரவரி 07 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| பிப்ரவரி 22 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| மார்ச் 09 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| மார்ச் 24 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| ஏப்ரல் 08 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| ஏப்ரல் 22 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| மே 07 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| மே 22 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| ஜூன் 06 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| ஜூன் 20 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| ஜூலை 06 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| ஜூலை 19 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| ஆகஸ்ட் 04 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| ஆகஸ்ட் 18 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| செப்டம்பர் 02 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| செப்டம்பர் 17 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| அக்டோபர் 02 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| அக்டோபர் 16 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| அக்டோபர் 31 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| நவம்பர்15 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| நவம்பர் 29 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| டிசம்பர் 18 | வளர்பிறை சஷ்டி விரதம் |
| டிசம்பர் 29 | தேய்பிறை சஷ்டி விரதம் |
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












