மாலை நேரத்தில் வீட்டில் செய்ய கூடாத செயல்கள் என்ன..?
வணக்கம் அன்பு கொண்ட நேயர்களே.. இன்றைய பதிவில் மாலை நேரங்களில் 6 மணிக்கு மேல் வீட்டில் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைத்து வீடுகளிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். வீட்டில் விளக்கேற்றும் நேரங்களில் சில தவறான செயல்களை செய்ய கூடாது.
தவறான செயல்கள் செய்வதால் வீட்டில் பணத் தட்டுபாடு, ஆரோக்கியமற்ற வாழ்வு, மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை போன்ற கஷ்டமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அதனால் விளக்கேற்றும் நேரங்களில் தவறான செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். அதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் இந்த செடிகளை வளர்க்காதீர்கள்..! |
விளக்கேற்றும் நேரத்தில் செய்ய கூடாத செயல்கள் என்ன..?
எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் சொல்லப்படுகின்றன. மாலை நேரத்தில் தான் கோவில்களிலும் வீடுகளிலும் இறைவனை நினைத்து விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் வீட்டில் சில தவறான செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பணம் கொடுக்க கூடாது:
மாலை நேரங்களில் யாரவது உங்களிடம் பணம் கேட்டு வந்தால் கொடுக்க கூடாது. இதனால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். உங்களுக்கு கடன் பிரச்சனை வந்து சேரும். அதனால் மாலை நேரங்களில் யாருக்கும் பணம் தரக்கூடாது.
பால் மற்றும் தயிர் கொடுக்க கூடாது:
மாலையில் விளக்கேற்றும் நேரங்களில் யாருக்கும் பால் அல்லது தயிர் வீட்டில் இருந்து கொடுக்க கூடாது. பால் மற்றும் தயிர் சந்திரன் லட்சுமி இரண்டு கடவுள்களையும் குறிக்கிறது.
அதனால் பால் அல்லது தயிர் கொடுப்பதால் லட்சுமி மற்றும் அவரது சகோதரனான சந்திர பகவானை கோபப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
துளசி செடியை தொடக்கூடாது:
மாலை நேரங்களில் வீட்டில் இருக்கும் துளசி பறித்தல், துளசி செடிகளை தொடவோ அல்லது துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றவோ கூடாது.
இதுபோல செய்வதால் வீட்டில் செல்வவளம் குறையும். பணக் கஷ்டம் வரும்.
வீட்டை பெருக்க கூடாது:
அதேபோல் விளக்கேற்றும் நேரங்களில் வீட்டை பெருக்கவோ, நகம் வெட்டவோ அல்லது தலையை சீவக் கூடாது. அதேபோல துணியும் துவைக்க கூடாது.
இதனால் தரித்திரம் வீட்டில் ஒட்டு கொள்ளும். அதனால் விளக்கேற்றும் நேரங்களில் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |