வாஸ்து படி வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் நஷ்டம் தான் வரும்..!

Vastu Tips for Money in Tamil

Vastu Tips for Money in Tamil

பொதுவாக அனைவருக்குமே பணம் கஷ்டம் என்பது இருக்கும். நீங்கள் ஆன்மிகத்தை அதிகம் நம்பு நபராக இருந்தால் கண்டிப்பாக வாஸ்து சாஸ்த்திரத்தையும் நம்புவீர்கள். அந்த வகையில் வாஸ்து சாஸ்த்திரம் படி பணம் சரியான இடத்தில் மற்றும் சரியான திசையில் வைக்க வேண்டும் அப்படி வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் கஷ்டம் ஏற்படும், அதேபோல் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் உண்டாகும். சரி இந்த பதிவில் வாஸ்து படி எந்த இடத்தில் பணம், நகைகளை வைக்கக்கூடாது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

பணம் பிரச்சனை நீங்கள் வாஸ்து சாஸ்திரம்:

No: 1

வாஸ்து படி ஒருவரது வீட்டின் லாக்கரின் நிறம், பொருள், வடிவம், அளவு, நிலை மற்றும் நோக்குநிலை மற்றும் படுக்கையறை அம்சங்கள் உங்கள் வீட்டில் பணப்புழக்கத்தை பாதிக்கலாம். வாஸ்து சரியாகச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்பீர்கள், பண வரவு அதிகரிப்பு மற்றும் உங்கள் செலவுகள் குறையும்.

No: 2

பொதுவாக ஒரு வீட்டின் பல திசைகள் இருக்கும் இதில் ஒரு சில திசைகளில் பணத்தை வைத்தால், அதிகமான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்படும். அந்த திசைகளில் ஒன்று தான் தென்கிழக்கு திசையாகும். அது வீட்டின் அக்னி மூலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த திசையில் நாம் பணத்தை வைத்தோம் என்றால், செலவுகள் அதிகரிக்கும். மேலும், உங்கள் நிதிநிலையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்திவிடும். குறிப்பாக, அந்த வீட்டின் குடும்பத் தலைவருக்கு கடன் தொல்லைகள் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சி குறையத் தொடங்குகிறது.

No: 3

அடுத்ததாக வீட்டின் மேற்குதிசையிலும் பணத்தை வைக்கக்கூடாது, அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் வீட்டின் மேற்கு திசையில் பணம் அல்லது நகைகளை வைத்திருந்தால், அது பண இழப்புக்கு வழிவகுக்கும் என்று நன்பப்படுகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பண வரவிலும், பணம் ஈட்டுவதிலும் சிரமம் ஏற்படும்.

No: 4

வீட்டின் மேற்கு மற்றும் வடக்கு திசையில் லாக்கரில் பணப்பெடியை வைப்பது வாஸ்து சஹதிறம்படி மிகவும் தவறாகும். ஏன் என்றால் இது வீட்டின் மேற்கு கோணம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பணப்பெட்டியை வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதாவது ஆரோக்கியம் சார்ந்த அல்லது வேறு ஏதாவது வீண் செலவுகளை ஏற்ப்படும். ஆக வீட்டில் இந்த திசையில் பணத்தை வைப்பதால் செலவுகள் அதிகரித்து வருமானம் குறையும்என்று நம்மைப்படுகிறது.

No: 5

வாஸ்து சாஸ்திரப்படி தெற்குச் சுவருக்குப் பின்புறமாகவும், வடக்கு நோக்கியதாகவும் இருக்கும் திசையே சிறந்தது. ஏன் சிறந்தது என்றால் செல்வத்தின் கடவுளான குபேரர் வடக்கை ஆக்கிரமிப்பதாகக் கூறப்படுகிறது. ஆகி இந்த சித்தில் நீங்கள் உங்கள் பணம் மற்றும் நகைகளை வைக்கலாம் இதன் மூலம் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும்.

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்
SHARE