இது மாதிரியான பொருட்களை வீட்டில் வைக்கவே கூடாது | Veetil Selvam Peruga

Advertisement

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இதுமாதிரியான பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வீட்டில் எந்த இடத்தில் என்ன பொருட்களை வைக்கவேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் படிதான் வைப்பார்கள். அது போல் வீட்டில் இந்த பொருட்களை வைக்கவே கூடாது. அது என்ன பொருள்? என்று நினைப்பீர்கள் சிலருக்கு என்ன மாதிரியான பொருட்கள் வைக்கக்கூடாது என்று தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்துகொண்டு அது போல் உங்கள் வீட்டிலும் செய்யுங்கள். வாங்க படித்தறிவோம்.

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

இது மாதிரியான பொருட்களை வீட்டில் வைக்கவே கூடாது:

இது மாதிரியான வீட்டில் வைக்கவே கூடாது

  • உங்கள் வீட்டில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த கடிகாரம் திடீரென்று நின்று விட்டால் அல்லது ஓடாதா கடிகாரம் நீண்ட நாட்களாக விட்டு சுவரில் மாட்டிவைத்திருப்பீர்கள் என்றால் வீட்டில் தீராத பிரச்சனை, மருத்துவ செலவுகள். செல்வம் தாங்காது. அதனால் ஓடாத கடிகாரத்தை வீட்டில் வைக்காதீர்கள்.
  • ஓடாத கடிகாரம் வீட்டில் வைப்பதால் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அதிகம் பிரச்சைகள் வரும் அதனால் வீட்டை விட்டு ஓடாத கடிகாரத்தை வெளியேற்றி விடுவது நல்லது.

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்:

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்

  • பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடியது கண்ணாடி, ஆனால் அந்த கண்ணாடியால் வீட்டில் பிரச்சனை வருகிறது என்றால் யாருக்காவது நம்பமுடியுமா? ஆனால் அது தான் உண்மை ஒரு கண்ணாடியால் பிரச்சனை வராது. கண்ணாடியில் சிறு பகுதி உடைந்து இருந்தால் அதனை வீட்டில் வைக்காதீர்கள்.
  • முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் இல்லை சாமி படங்களில் கண்ணாடி பொருந்திருந்து அதுவும் உடைந்து இருந்தால் ஜன்னல் கண்ணாடி உடைந்தாலும் அதனையும் உடனே மாற்றிவிடுங்கள். அதனை வீட்டில் வைத்து உபயோகபடுத்தினால். அது உங்களுக்கும் சரி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் உண்மை அளிக்காது.
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!

Veetil Selvam Peruga:

இது மாதிரியான வீட்டில் வைக்கவே கூடாது

  • பொதுவாக பெண்கள் அனைவரும் கையில் வளையல் அணிந்திருப்பார்கள். இப்போது இருக்கும் காலகட்டத்தில் வளையல் அணிவதில்லை ஆனால் இன்னும் சிலர் வீட்டில் இருக்கும் பாட்டிகள் கண்ணாடி வளையல் அணிந்திருப்பார்கள். அப்போது அது சாஸ்திரம் என்று சொல்வார்கள்.
  • ஆனால் ஒரு சில விஷயம் மட்டும் அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை கையில் அணிந்திருக்கும் வளையலில் சிறிது  உடைந்தாலும் உடனே கையில் இருந்து அதனை கழட்டி தூக்கியெறிந்து விடுவார்கள். காரணம் அதை வீட்டிலும் வைக்கக்கூடாது கையிலும் அணிந்திருக்கக்கூடாது. அது அதிக செலவுகளையும் வீண்விவாதங்களையும் உருவாக்கும். இந்த பொருட்களை வீட்டில் வைக்காமல் இருந்தால் வீட்டில் செல்வம் தங்கும்.

இது மாதிரியான பொருட்களை வீட்டில் வைக்கவே கூடாது:

  • வீட்டில் இருக்கக்கூடாதா பொருட்களில் துருப்பிடித்த பொருட்களும் ஒன்று. துருப்பிடித்த பொருட்கள் என்றால் சிறு அணியாக இருந்தாலும் சரி அதனை வீட்டில் வைக்கக்கூடாது, முக்கியமாக கட்டில் சாமி படத்தில் துரு பிடித்திருக்கக்கூடாது. அது வீட்டில் நிம்மதியை அளிக்காது, ஒருவருக்கு ஒருவர் எதிர் மறை எண்ணங்களை அளிக்கும்.

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்:

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்

  • வீட்டில் உள்ளே பொருட்களை வைக்க கூடாது போல் வீட்டிற்கு வெளியில் இந்த பொருட்களை  வைக்க கூடாது. முதலில் காய்ந்த செடி, கோடி மரம் என ஏதும் காய்ந்த நிலையில் இருக்கக்கூடாது. இது போன்று பொருட்களோ செடி கொடிகளை வீட்டில் வைத்தால் அது வீட்டிற்கு நிச்சியமாக மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்காது. அதனால் இதனை வீட்டில் வைக்கவே கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement