அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்..!

அல்சர் குணமாக பழங்கள்

அல்சர் குணமாக பழங்கள்..! Foods to Cure Ulcer in Tamil..!

Foods to Cure Ulcer in Tamil – இன்றைய லைப் ஸ்டைல் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சந்திக்கக்கூடிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றான இருப்பது அல்சர். இத்தகைய அல்சர் பிரச்சனைக்கு நீங்கள் வெறும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு பதில். நீங்கள் ஆரோக்கிய உணவு முறைகளை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.  அல்சர் பிரச்சனைக்கு பழங்களை எடுத்து கொள்வதன் மூலம் மிக எளிதாக இந்த பிரச்சனையை சரிசெய்துவிட முடியும். சரி அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

அல்சர் குணமாக பழங்கள்..! Foods to Cure Ulcer in Tamil..!

ஆப்பிள்:

ஆப்பிள்

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகுள், பைலோரி பாக்டீரியாவில் வளர்ச்சியைத் தடுக்கும்.

பொதுவாக நாம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதோடு, அல்சர் வராமலும் தடுக்கும்.

அல்சர் குணமாக பழங்கள் – மாதுளை:

அதிக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரந்த பழங்களில் ஒன்று தான் மாதுளை. பொதுவாக செரிமான பிரச்சனைக்கு இந்த மாதுளை பழம் மிகவும் சிறந்தது. ஆகவே வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு இந்த மாதுளை பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

மாதுளையின் தோலில் உள்ள புனிகலஜின்ஸ் வயிற்றுப் பிரச்சனைகளுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும்.

அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

சீத்தாப்பழம்:

சீத்தாப்பழம்

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.

பலாப்பழம்:

பலாப்பழம்

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவைரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் பலாப்பழம். இந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் உதவுகின்றது.

அல்சர் குணமாக பழங்கள் – முலாம்பழம்:

Muskmelon

முலாம் பழத்தில் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.

மேலும் முலாம் பழம் நமது உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்
அல்சர் குணமாக சித்த வைத்தியம் …!

 

இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips