இரண்டே நிமிடத்தில் 100% Pure Sanitizer நம்மளே செய்யலாம்..! Sanitizer Make at Home..!

Sanitizer Make at Home

இரண்டே நிமிடத்தில் 100% Pure Sanitizer நம்மளே செய்யலாம்..! Sanitizer Make at Home..!

Sanitizer Make at Home: ஹாய் ப்ரண்ட்ஸ் இன்றைய பொதுநலம் பதிவில் இரண்டே நிமிடத்தில் 100% கை சுத்தகரிப்பான்(Sanitizer) தயாரிப்பது எப்படின்னு பார்க்கலாம் வாங்க. இந்த Sanitizer மெடிக்கல் கடைகளில் மிகவும் விலை அதிகமா இருப்பதனால் இந்த கை சுத்திகரிப்பான் தயாரிக்கும் முறையை நாம் வீட்டிலே செய்யலாம்.

இந்த Sanitizer செய்றது ரொம்ப கடினமான விஷயம் எல்லாம் இல்லங்க இரண்டே நிமிடத்தில் எப்படி செய்யலாம்னு பாப்போம். sanitizer செய்ய நெறய செலவு, பொருள்கள் எல்லாம் ஆகும்னு நெனைக்காதீங்க. இந்த கை சுத்தகரிப்பான்(Sanitizer Make at Home) தயாரிப்பதற்கு இரண்டே பொருள் இருந்தால் போதும். இரண்டே நிமிடத்தில் 100% Pure Sanitizer ரெடி.

newகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

 

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை  – 2 மடல் 
  • Iso Propyl Alcohol. 

கை சுத்தகரிப்பான்(Sanitizer Make at Home) செய்முறை விளக்கம் 1:

Sanitizer Make at Home: முதலில் 2 கற்றாழை மடலை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த கற்றாழையில் ஓரபகுதியில் உள்ள முள்களை அகற்றிவிட வேண்டும். இப்பொழுது கற்றாழையில் உள்ள நடுப்பகுதியை மட்டும் அதாவது கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்து வைத்த ஜெல்லை ஒரு கிளாஸ் அளவிற்கு வரும் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு Spray Bottle எடுத்துக்கொள்ளவும். ஸ்ப்ரே பாட்டில் வீட்டில் இல்லாதவர்கள் கடைகளில் கூட வாங்கிக்கலாம். இப்போ அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை இந்த Spray Bottle -ல் ஊற்றி கொள்ளவும்.

அடுத்ததாக கற்றாழை ஜெல்லோட என்ன சேர்க்கபோறோம்னா Iso Propyl Alcohol -அ  add பண்ணிக்கணும்.இது மெடிக்கல் ஷாப்லயே கிடைக்கும். இந்த Iso Propyl-ன் தன்மை பாத்தோம்னா நார்மல் தண்ணீர் மாதிரி தான் இருக்கும்.

கற்றாழை ஜெல்லோட இந்த Iso Propyl ஒரு 2 டம்ளர் அளவுக்கு Add பண்ணிக்கணும். 2 டம்ளர் அளவுக்கு Iso Propyl எடுத்துகிட்டீங்கன்னா 1 டம்ளர் அளவு ஜெல் எடுத்துக்கணும்.

இதுதாங்க இதோட அளவு முறை. கடைசியா spray bottle-ல ரெண்டையும் add பண்ணதுக்கு அப்புறம் பாட்டிலை நன்றாக மூடிவிட்டு குலுக்கனும். அவ்ளோதா ப்ரண்ட்ஸ் Sanitizer ரெடி..! எல்லாரும் இந்த டிப்ஸ பாத்துட்டு வீட்ல மறக்காம ட்ரை பண்ணுங்க..!

newஇயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

 

கை சுத்தகரிப்பான்(Sanitizer Make at Home) செய்முறை 2:

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை  – 1 மடல் 
  • Eucalyptus oil – 3 Drop 
  • Vitamin E Capsule – 1

கை சுத்தகரிப்பான்(Sanitizer Make at Home) செய்முறை விளக்கம் 2:

Sanitizer Make at Home: முதலாவதாக (Aloe Vera) கற்றாழையை எடுத்து அதன் ஓரப்பகுதியை நறுக்கி கொள்ளவும். ஏன் இந்த கற்றாழையை முக்கியமா சொல்றனா அதுல உள்ள Antibacteria தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும்,  நோய் கிருமி தொற்று எதுவும் நம்ம உடல்ல வராம பாதுகாக்குறதுக்கு இந்த கற்றாழை மிகவும் பயன்படுகிறது.

கற்றாழையில் இதுமட்டும் இல்லங்க இன்னும் Anti Oxidants, Anti Viral, Anti Fungus, இது மாறி நிறைய இருக்கிறதுனால நம்ம உடல்ல உள்ள Immunity பவர் அதிகமா ஆக்கும். இப்போ கற்றாழை ஜெல்லை எடுத்துட்டு ஒரு மிக்சி ஜார்ல அரைத்துக்கொள்ளவும்.

அந்த கற்றாழை ஜெல்லை விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும். ஏனென்றால் ரொம்ப அரைத்துவிட்டோம்னா Liquid ஷேப் வரும். நமக்கு ஜெல் வடிவத்தில் தான் தேவைப்படுகிறது அதற்கேற்ற மாறி Ready பண்ணிக்கோங்க.

அடுத்ததாக தனியா ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை ஊற்றிக்கவும். பிறகு, அதனோடு Eucalyptus oil 3 ட்ராப்ஸ்  சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணனும்.

இது ஏன் Add பண்றோம்னா இதுல இருக்க Antiseptic தன்மை நம்ம உடல்ல இருந்து பாதுகாக்கிறது. Antiseptic தன்மை மட்டும் இல்லாம அதோட உடல்ல இருக்க அலர்ஜி போன்ற பிரச்சனைக்கும் இது சரி செய்யும்.

அடுத்ததாக வைட்டமின் இ கேப்சுல் 1 (Vitamin E Capsule 1) Add பண்ணனும். இத ஏன் Add பண்றோம்னா நம்ம கைகளுக்கு தேவையான ஈரப்பதம் குடுக்கும்.

அதோட கை எப்போதும் மென்மையாக(Softness) வைத்திருக்க உதவுகிறது. கடைசியா எல்லாம் add பண்ணிட்டு நம்ம எக் பீட்டர்(Egg Beater) வெச்சிகூட மிக்ஸ் பண்ணிக்கலாம்.

கடைசியா Spray பாட்டில் மாறி எடுத்துட்டு ரெடி பண்ண ஜெல்லை வடிக்கட்டி மூலம் வடிகட்னா வேலை சுலபமாவே முடியும். அவ்ளோதாங்க இந்த Sanitizers Ready. இந்த Sanitizers எப்படி Use பன்னலாம்னு பாத்தோம்னா கைல 1 ட்ராப் ஊத்திட்டு யூஸ் பண்ணனும். 1 வாரம் அப்புறம் புதுசாகவே தயாரித்துக்கொள்ளலாம்.

இந்த கை சுத்தகரிப்பான்(Sanitizer) இயற்கை முறையில் செய்துள்ளதால் எந்த வித பக்க விளைவுகளும் வராது. அனைவரும் இதை மறக்காமல் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க  ப்ரண்ட்ஸ்..!

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> patti vaithiyam tamil tips
SHARE