ஒரு பக்க காது வலி குணமாக வைத்தியம்..!

Advertisement

ஒரு பக்க காது வலி குணமாக மருந்து | Kathu Vali Treatment in Tamil

Kathu Vali Marunthu:- இப்போல்லாம் எல்லாருக்குமே உடல் ரீதியாக ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது திடீரென்று உடம்பு சரியில்லாமல் போவது, தலை வலி, உடம்பு வலி, பல்வலி என்று சொல்லி கொண்டே போலாம். அந்த வரிசையில் வரக்கூடிய பிரச்சனையில் ஒன்று தான் காது வலி. இந்த காது வலி வந்தால் படாத அவஸ்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக காதுகளில் உள்ள நரம்புகள் அதிகளவு வலியை உண்டாகும். அதிலும் பலருக்கு ஒரு பக்கத்தில் மட்டும் அதிக காது வலி ஏற்படும். இருப்பினும் இது போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவர்களை அணுகுவதுதான் சரியான தீர்வாகும்.

Kathu Vali Karanam in Tamil:-

ear pain in tamil

மனிதனின் காதுகளில் மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. உள் காது, நடு காது மற்றும் வெளி காது. பெரும்பாலும் காது வலி என்பது மூன்றில் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது 3 பகுதிகளிலோ தான் ஏற்படக்கூடும். பொதுவாக காது வலிக்கு காரணமாக 2 காது தொற்றுகள் கருதப்படுகின்றன. ஒன்று, வெளிப்புற காது தொற்று (otitis ecterna), இரண்டாவது, நடுப்பகுதி காது தொற்று (otitis media). சரி தற்காலிகமாக இந்த காது வழியை குணப்படுத்த என்ன கைவைத்தியம் உள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Kathu Vali Vaithiyam..!

மா இலைச் சாறு:

மா இலை

நிறைய பேருக்கு தெரிந்திருக்காது, மா இலையில் நோய் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளது என்பது. இதனாலேயே, காது வலிக்கு மா இலையின் சாறு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மா இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு கசக்கி, சாறு எடுத்துக் கொள்ளவும். வலி இருக்கும் காதில் மா இலையின் சாற்றை ஊற்றுவதற்கு முன்பு சிறிது மிதமான சூடேற்றி கொள்ளவும்.

இஞ்சி:

இஞ்சி

இஞ்சியில் நோய்தொற்று எதிர்ப்பு பண்பும், வலி நிவாரணமும் உள்ளது. சிறிது இஞ்சியில் சாறு எடுத்து, அதனை 2-3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் சேர்க்கவும். இதனை நன்கு கலந்து 3-4 சொட்டுக்கள் வலி இருக்கும் காதில், வலி போகும் வரை தொடர்ந்து ஊற்றி வரவும்.

பூண்டு எண்ணெய்:

பூண்டில் நோய்தொற்று எதிர்ப்பு பண்புகளும், வலி நிவாரண பண்புகளும் அதிகமாகவே உள்ளன. இவை, காது வலியை குறைக்க உதவும். பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 3-4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதில், தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து எண்ணெயை ஆற வைக்கவும். தயாரித்து வைத்துள்ள பூண்டு எண்ணெயை 2-3 சொட்டுகள் வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வந்தால், காது வலி குணமாகும்.

இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement