கண் அரிப்பு நீங்க | Kan Arippu Neenga

Advertisement

கண் அரிப்புக்கு என்ன செய்ய வேண்டும் | Eye Itching Home Remedies in Tamil

வணக்கம் நண்பர்களே நாட்டில் இப்போதெல்லாம் மனிதருக்கு உடலில் நாம் நினைக்காத நோயெல்லாம் வருகிறது. சிலருக்கு கண்களில் எப்போதும் நீர் வடிந்து கொண்டே இருக்கும், கண்களில் எரிச்சல், கண் சிவந்து போதல், கண் பகுதிகளில் எப்போதும் அரிப்பு இருந்துகொண்டு இருக்கும். இதற்கு காரணம் அதிக நேரம் டிவி, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியை பார்த்தப்படி வேலை செய்வது இது போன்று கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பதனால் கூட கண்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற கண் சம்பந்தமான தொந்தரவுகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. இந்த பதிவில் கண்களில் ஏற்படும் அரிப்புக்கு ஒரு சில வீட்டு வைத்திய குறிப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். கண் அரிப்பு உள்ளவர்கள் இந்த டிப்ஸ்களை பாலோ செய்து பாருங்கள். நல்ல பலன் அளிக்கும்.

ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்

கண் அரிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி:

  • கண் அரிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகண்களில் ஏற்படும் நோயை பொறுத்து அதன் அறிகுறிகள் இருக்கும். கண்களில் உள்ள இமைகள் மற்றும் புரதங்கள் சிவந்த நிலை அடைதல் கண் அரிப்பிற்கான அறிகுறி.
  • கண் மற்றும் கண்களை மேல் சுற்றி வீக்கம் அடைந்து இருக்கும்.
  • கண் இமைகள் வீங்கி போய் இருக்கும்.
  • ஒவ்வொமை காரணத்தினாலும் கூட கண்களில் அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படலாம். இது மாதிரி பல அறிகுறிகள் உள்ளன.

கண் அரிப்புக்கு என்ன செய்ய வேண்டும்:

டிப்ஸ் 1: வெளியில் எங்கு சென்றாலும் அல்லது அலுவலகம் சென்று விட்டு மாலை வீடு சென்றடைந்த பிறகு கண்களை கையால் தொடுவதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனென்றால் கைகளிலிருந்து தான் நுண்கிருமிகள் அதிகமாக கண்களுக்கு பரவுகிறது.

டிப்ஸ் 2: பொதுவாக வெள்ளரிக்காய் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று. வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக் கண்களின் மேல் அரிப்பு உள்ள இடத்தில் 10 நிமிடம் வைத்தால் கண் அரிப்பு குறையும்.

டிப்ஸ் 3: ரோஸ் வாட்டர் கண் அரிப்பை முற்றிலும் குறைத்துவிடும். கண் அரிப்பிற்கு ரோஸ் வாட்டரை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் ரோஸ் வாட்டரை கலந்து கண் அரிப்பு உள்ள இமைகளின் மேல் தடவி வரலாம், கழுவலாம், துணி வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

டிப்ஸ் 4: அதுபோல அதிகமாக கண் அரிப்பு இருப்பவர்கள் குளிர்ச்சியான பாலில் பஞ்சை நனைத்துக் கண் அரிப்பு உள்ள இமைகளின் மேல் ஒத்தி எடுக்கலாம். கண் அரிப்பு குணமாகும்.

டிப்ஸ் 5: ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து அதனை கொண்டு கண்களில் அரிப்பு உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை செய்து வந்தால் கண் வீக்கம், கண் அரிப்பு முற்றிலும் குணமாகும்.

டிப்ஸ் 6: கண் அரிப்பிற்கு ஒரு கப் அளவு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த சீமை சாமந்திப்பூவினை போட்டு 5 நிமிடம் கழித்து வடிகட்டி அதில் கண்களை கழுவி வர கண் அரிப்பு குறைந்துவிடும். 

டிப்ஸ் 7: இரவு படுக்கைக்கு முன்பு ஒரு துளி அளவு விளக்கெண்ணெயை கண் அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர கண் அரிப்பு மற்றும் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். 

டிப்ஸ் 8: வெந்நீரில் கல் உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு நான்கு முறை கண்களை கழுவி வர கண் அரிப்பு குணமாகும். 

டிப்ஸ் 9: சுத்தமான வெள்ளை துணியில் மஞ்சளை நனைத்து ஐஸ் கட்டிகளை வைத்து கண்களுக்கு நான்கு முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண் அரிப்பு முற்றிலும் சரியாகிவிடும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement