காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் எது..!

Advertisement

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் (Empty Stomach)அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.

வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு வெறும் வயிற்றில் (Empty Stomach) எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது எனத் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சரி வாங்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிக்கூடாத உணவுகள் (Empty Stomach) என்னென்ன என்று இப்போது நாம் காண்போம்…

காபி (Coffee On An Empty Stomach):

அனைவரும் காலை எழுந்தவுடன் முதலில் குடிப்பது காபி தான், காபியை காலை வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிட்டால் இவற்றில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அதிகளவு பிரச்சனைகளை உறுவாக்கும்.

இவற்றால் வயிற்றில் முதலில் புண் உருவாகி பின்பு அல்சர்  வந்து விடும். அதுக்காக நீங்கள் காபி குடிக்க கூடாது என்று கூறவில்லை, வெறும் வயிற்றுடன் காபி அருந்தாதிர்கள். அதற்கு முன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் குடித்த பிறகு காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ:

காபியில் உள்ள அதே காப்ஃபைன் தான் டீயிலும் உள்ளது ஆகையால் இவற்றையும் வெறும் வயிற்றில் (Empty Stomach) குடிக்க கூடாது. அவ்வாறு மீறி குடித்தால் வயிற்று படலத்தை அதிகளவு பாதிக்கும்.

அல்சர் சீக்கிரம் குணமாக சித்த வைத்தியம்!

வெறும் வயிற்றில் மோர்:

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால், பாக்டீரியாவானது வயிற்றில் உப்பு சத்தை அதிகம் ஏற்படுத்தி உங்களுக்கு அதிகளவு விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே காலை வெறும் வயிற்றில் மோர் (Empty Stomach) சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்..

வெறும் வயிற்றில் வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் மக்னீசியத்தை அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தகூடும்.

எனவே காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொள்ளாதிர்கள்.

எண்ணெய் தின்பண்டங்கள்:எண்ணெய் தின்பண்டங்கள்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றியில் எண்ணெய் தின்பண்டங்கள் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் வாந்தி, வயிற்று உப்பி கொள்ளுதல், நெஞ்சு எரிச்சல், வயிற்று புண் என்று பல வகையான பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஆகையால் வெறும் வயிற்றில் (Empty Stomach) இருக்கும் போது எண்ணெய் தின்பண்டங்களை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

வயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

புளிப்பான உணவுகள்:

அதாவது சிலருக்கு புளிப்பான உணவுகள் பிடிக்கும். அவற்றை உண்ண ஆசைப்பட்டு காலை எழுந்தவுடன் சாப்பிடுவார்கள். இவற்றை சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு தொண்டையில் ஒரு விதமாக தோண்றும்.

அவ்வாறு ஏற்பட காரணம் என்ன என்றால் புளிப்பு தன்மையான அந்த உணவுகள் தான் காரணம்.

அது வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி செரிமானம் அடையாமல் ஒரு மாதிரியான வாந்தி மற்றும் வயிற்உப்பிக்கொள்ளுதல் என்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி சிரமப்படுத்தும்.

சோடா:

வெறும் வயிற்றில் சோடாவை குடித்தால் அவற்றில் கார்போனேட் ஆசிட் அதிகம் இருப்பதால் அது வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து குமட்டல் மற்றும் வயிற்று பிறட்டல் ஏற்படுத்தும்.

இனிப்புகள்:

பலருக்கு அதிகமாக பிடித்த ஒன்றாக விளங்குவது இனிப்பு. அதிலும் குழந்தைகளுக்கும் அதிகம் பிடிக்கும். இவற்றை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்சில் ஒரு வகையான புளிப்பு தன்மையை ஏற்படுத்தும்.

மாத்திரைகள்:மாத்திரைகள்

வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடகூடாது. ஏன் என்றால் வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, அமிலத்துடன் கலந்து வயிற்றில் புண் உருவாக்கும். இவற்றை தொடர்ந்து உட்கொண்டால் அது அல்சர் மற்றும் வயிற்றில் புற்று நோய் உருவாக்கும்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்.!

காரமாண உணவுகள்:

வெறும் வயிற்றில் (Empty Stomach) காரமாண உணவுகள் சாப்பிடகூடாது. ஏனெனில் அவற்றை உட்கொள்ளும் போது வயிற்றில் கடுமையான எரிச்சல் மற்றும் வயிற்று வலி, வயிற்று போக்கு, குடல் புண் மற்றும் அல்சர் உண்டாகும்.

அசைவ உணவுகள்:

பொதுவாக அசைவ உணவுகள் காலை வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிட கூடாது. ஏன் என்றால் பொதுவாக அசைவ உணவுகளில் அதிகமாக கொழுப்பு சத்துகள் இருப்பதால் வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாது.

அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது அவ்வாறு இருக்கையில் அசைவ உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது பல வகையான பிரச்சனைகளை உருவாக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement