சளி குணமாக இயற்கை வைத்தியம் ..!

சளி குணமாக

சளி பிரச்சனைக்கு (Cold Treatment In Tamil) பூண்டு எப்படி பயன்படுத்தலாம்? விரிவான விளக்கம் !!!

சளி குணமாக பூண்டு வைத்தியம்..!

பூண்டு, சளி குணமாக (cold treatment in tamil) மட்டுமின்றி காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்று வலி மற்றும் பாம்பு கடி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

மேலும் ஆய்வு ஒன்றிலும் பூண்டில் இருக்கும் மருத்துவ குணத்தால் குடல் புண், புரோஸ்டேட், நுரையீரல், சிறுநீர்ப்பை புற்று நோய் போன்றவற்றை குணப்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஆயுர்வேதத்தில் பூண்டு மிக சிறந்த ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு சமையலின் சுவையை அதிகரிக்கும் என்று அனைவருக்கும் இயல்பாகவே தெரியும்.

ஆனால் பூண்டு மழைக்காலத்தில் நாம் அதிகம் அவஸ்தைப்பட்டு வரும் சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று தெரியுமா உங்களுக்கு. ஆமாங்க தினமும் நாம் தேவையான அளவு பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகம் நிவாரணம் அளிக்கிறது.

20 வகை நோய்களுக்கு எளிய மருத்துவ குறிப்புகள் !!!

சரி சளி குணமாக (cold treatment in tamil) பூண்டை எப்படியெல்லாம் சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம் என்று நாம் இங்கு காண்போம்.
பூண்டு

சளி குணமாக (Cold Treatment In Tamil) பூண்டு வைத்தியம்..!

சளி குணமாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால்:

இந்த சளி குணமாக பூண்டு பற்களை பச்சையாக தினமும் பலமுறை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

தேனுடன் சேர்த்து:

சளி குணமாக பூண்டை தேனுடன் சேர்த்து சாப்பிட சளி தொல்லை நீங்கும். அதுவும் தினமும் இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி அதனை தேனுடன் கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும்.

இந்த நீரை குடித்து வர:

சளி குணமாக (cold treatment in tamil) இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்பு அந்த நீரை குடித்து வர சளியில் இருந்து விடுபெறலாம்.

ஆரஞ்சு ஜூஸில்:

சளி மருந்து ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து தினமும் குடித்து வர சளியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி அதனை ஆரஞ்சு ஜூஸில் கலந்து குடித்து வர சளியில் இருந்து விடுபெறலாம்.

சளி மருந்து

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்தால் சளி தொல்லை நீங்கும். பூண்டு டீ போடும்போது அவற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பூண்டு டீ தயார் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு பூண்டு சளி மருந்து குடிப்பதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளி தொல்லை நீங்கும்.

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

தக்காளியுடன்:

சளி குணமாக (cold treatment in tamil) 2 அல்லது 3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து. அதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து குடித்து வர சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சளி தொல்லை நீங்கும் வரை இதை தொடர்ந்து குடித்துவர வேண்டும்.

பூண்டு சூப்:

மழைக்காலத்தில் உங்களுக்கு சளி பிடித்திருந்தால், அப்போது பூண்டு சூப் குடித்து வரலாம்.

அதுவும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் சளி, இருமல் தொல்லை முற்றிலும் குணமாகும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு:

உயர் இரத்த அழுத்தத்திற்கு பூண்டு நல்ல மருந்து. எனவே வெள்ளை பூண்டை தினமும் வேகவைத்தோ அல்லது தீயில் சுட்டோ உட்கொண்டு வரலாம்.

இவ்வாறு சாப்பிடுவதினால் உயர் இரத்த அழுத்தம் குறையும், இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பையும் வெளியேற்றும் மற்றும் இதயத்திற்கு நல்லது.

பூண்டுச்சாறோடு தண்ணீர் கலந்து சாப்பிடலாம்:

காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தால் வெள்ளை பூண்டு சாறுடன், கொஞ்சம் தண்ணீர் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அது மட்டுமின்றி வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய் மற்றும் வயிற்று வலி போன்ற நோய்களுக்கு வெள்ளை பூண்டு நல்ல நிவாரணம் அளிக்கும்.

சளி குணமாக பூண்டு பால்:

பூண்டு பால்

தேவையான பொருட்கள்:

பால் – 50 மில்லி
தண்ணீர் – தேவையான அளவு
பூண்டு 10-12 பற்கள்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
மிளகுத்தூள் 2 சிட்டிகை
பனங்கற்கண்டு (அ) சர்க்கரை – தேவைக்கேற்ப

சளி குணமாக பூண்டு பால் செய்முறை:

முதலில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவேண்டும், பின்பு அவற்றில் பூண்டு பற்களை போட்டு நன்கு வேக வைக்கவும்.

அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு (அ) சர்க்கரை அவற்றில் போட்டு கொதிக்கவிடவும். அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறியதும், மத்தை பயன்படுத்தி நன்கு கடையவும். அவ்வளவுதான் பூண்டு பால் ரெடி.

இந்த பாலை இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் குடித்தால், சளி தொல்லை நீங்கும் (cold treatment in tamil).

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்