சின்ன வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா..?

Small Onion Benefits in Tamil

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்… இன்றைய ஆரோக்கியம் பதிவில் சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முதலிடத்தை பிடிக்கிறது. வெங்காயம் சேர்த்து சமைக்காத உணவுகளே இல்லை. பொதுவாக வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல சின்ன வெங்காயம் எவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? நாம் அதிகம் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்துவோம். சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேனில் ஊற வைத்து சின்ன வெங்காயம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ..?

சின்ன வெங்காயம் பயன்கள்:

வெங்காயத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என 2 வகைகள் உள்ளன. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

சின்ன வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. வெங்காயத்தின் காரத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்னும் வேதிப்பொருள் தான் நம் கண்களில் நீர் வரக் காரணமாகிறது.

மேலும் வெங்காயத்தில் கால்சியம், மினரல், இரும்புச்சத்து,  பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. 

சிறுநீரக கற்களை கரைக்க: 

யுரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

சிறுநீரக பிரச்சனைக்கு சின்ன வெங்காயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தினமும் சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

சுவாச கோளாறுகள் நீங்க:

தினமும் சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இருமல், சளி, நுரையீரல் பாதிப்பு, மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்க: 

தினசரி சின்ன வெங்காயத்தை உணவுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்ல பலனளிக்கிறது.

வயிற்று கோளாறுகளை தடுக்க:

செரிமான பிரச்சனை, குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தினமும் சின்ன வெங்காயம் உணவுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

மூலநோய் வராமல் தடுக்க:

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் மூலநோய் வராமல் தடுக்க முடியும்.  மூலநோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் அளிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்