சுகர் நார்மல் அளவு என்ன? | Sugar Level Normal Range in Tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய நோய் என்றால் அது சர்க்கரை நோய் தான். முன்பெல்லாம் நீரிழிவு நோய் வயதானவர்களை தான் அதிகம் பாதிக்கும் ஆனால் இப்போது, குழந்தைகளை தான் பாதிக்கிறது. இந்த நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் யாராவது சில நபர்களுக்கு மட்டும் தான் சர்க்கரை நோய் பிரச்சனையை இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் வீட்டிற்கு இரண்டு நபர்களுக்கு சுகர் பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை முறை தான். இதற்கு தீர்வாக மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். அவர்களும் நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்து விட்டு மாத்திரை, மருந்துகளை எழுதி தருகிறார்கள். இந்த பதவில் சுகர் நார்மல் அளவு பற்றி அறிந்து கொள்வோம்.
சுகர் நார்மல் அளவு:
- சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால் அது சரியான அளவு.
- சர்க்கரையின் அளவு 200 மி.கி./டெ.லி.க்கு அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது??? |
சுகர் நார்மல் அளவு என்ன?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு முறைகள் மேற்கொள்ளப்படுகிறது ஒன்று சாப்பிடுவதற்கு முன்பு மற்றொன்று சாப்பிட்ட பிறகு.
சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 6 முதல் 110 மி.கி வரை இருக்க வேண்டும். இது சுகர் நார்மல் அளவு.
சாப்பிட்ட பின் சர்க்கரையின் அளவு 80 முதல் 140-குள் இருக்க வேண்டும். இதற்கு மேல் ஒருவரின் உடம்பில் சர்க்கரை அளவு இருந்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு 180-க்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் இருப்பது நிச்சயம் ஆகும்.
முதன் முதலில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக மற்றும் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை அளவிட வேண்டும். இரண்டு முறையும் உங்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நோய் என்பதை உறுதி செய்யலாம்.
சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்.
சாப்பிடாமல் இருக்கும் போது சுகரின் அளவானது 80 முதல் 130-குள் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய் வர காரணம்:
- உடலில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை நோய் உருவாகலாம்.
- நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
- இனிப்பு உணவுகள் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்கும் போது இன்சுலின் அளவும் அதிகரிக்கும், இதனால் சர்க்கரை நோய் வரலாம்.
- உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வரலாம். அதிக தாகம், சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை நோய் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்வது நல்லது.
- நீங்கள் ஆரோக்கியமான உணவு முறை, சரியான நேரத்திற்கு தூங்கினால் உடலில் எந்த பிரச்சனையும் வராது. அதனால் உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் தான் மிகப்பெரிய சொத்து என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |