தூயமல்லி அரிசி நன்மைகள் | Thooyamalli Rice Benefits in Tamil

தூயமல்லி அரிசி பயன்கள் | Thooyamalli Arisi Payangal

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் பகுதியில் தூயமல்லி அரிசியின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் வாழ்ந்த நம் தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த அரிசி எதுவென்றால் இந்த தூயமல்லி அரிசி தான். இந்த அரிசியின் சுவை எண்ணில் அடங்காதவை. அந்த அளவிற்கு சுவை கொண்டதாக இருக்கும். வாங்க இந்த அரிசியில் இருக்கக்கூடிய சத்துக்களையம் நன்மைகளையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

கார்போக அரிசி மருத்துவ பயன்கள்

தூயமல்லி அரிசியின் சிறப்புகள்:

 தூயமல்லி அரிசி நன்மைகள்

தூய வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய அரிசியை பார்த்தாலே எல்லோருக்கும் அப்படியே அள்ளி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். அதுவும் இல்லத்தரசிகளுக்கு அரிசி பளபளவென இருக்க வேண்டும். அரிசியானது சீக்கிரத்தில் வேக வேண்டும் என்றும் நினைப்பார்கள். இத்தனை சிறப்புகளும் இந்த ஒரு அரிசியில் அடங்கியுள்ளதால் மக்களிடம் பெரும் வரவேற்பினை இந்த தூயமல்லி அரிசி பெற்றுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்:

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

எளிதில் ஜீரணம் ஆக:

 thooyamalli rice benefits in tamil

சிலருக்கு உணவு சாப்பிட பிறகு ஜீரணம் ஆகாமல் வாமிட்டிங் பிரச்சனை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உணவில் இந்த அரிசியை எடுத்துக்கொள்வதால் மிக விரைவில் ஜீரணம் ஆகிவிடும்.

நீரிழிவு நோய் குணமாக:

 தூயமல்லி அரிசி பயன்கள்

இந்த தூயமல்லி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது. இரத்தத்தையும் சுத்தப்படுத்தி உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்கிறது. இந்த அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

குதிரைவாலி அரிசி பயன்கள்

பித்தம் குறைய:

 thooyamalli arisi payangal

சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கும். பித்தம் உடலில் அதிகம் இருப்பவர்கள் இந்த தூயமல்லி அரிசியால் சமைத்த உணவினை சாப்பிட்டு வர பித்தத்திலிருந்து நல்ல மாற்றம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வாத பித்தம், கபம் போன்ற நோய்களும் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

 தூயமல்லி அரிசி நன்மைகள்

உடலானது நல்ல ஆற்றலுடன் இருந்தால் தான் எந்த ஒரு வேலையினையும் நாம் முழுமையாக செய்ய முடியும். அதற்கு நாம் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தூயமல்லி அரிசியானது உடலை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தூயமல்லியின் அரிசி மட்டும் இல்லாது இதனுடைய தவிடும் மிகுந்த சக்தியினை கொண்டுள்ளது. இந்த அரிசியின் நீராகாரம் இளநீர் போன்ற சுவையுடன் இருக்கும். இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது.

நரம்பு பலம் பெற:

 thooyamalli rice benefits in tamil

நரம்புகள் பலம் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது இந்த தூயமல்லி அரிசி. வயதாகிவிட்டால் வெளி தோற்றம் மட்டும் முதிர்ச்சி அடையாமல் உள் உறுப்புகளும் முதிர்ச்சியடையும். இந்த பிரச்சனையை முற்றிலும் சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது இந்த தூயமல்லி அரிசி.

பூங்கார் அரிசி பயன்கள்

என்னென்ன உணவுகளாக சாப்பிடலாம்:

இந்த அரிசியால் சமைக்கப்பட்ட உணவினை மதிய உணவாக சாப்பிட பிடிக்காதவர்கள் காலை உணவில் இட்லி, தோசை, அடை போன்ற உணவுகள் செய்தும் சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாய் இருந்ததற்கு முக்கிய காரணம் இது மாதிரியான சத்துக்கள் நிறைந்த அரசி வகைகளை சாப்பிட்டதால் தான். இன்றைய சந்ததியினர்கள் சுவைக்காக மட்டுமே உணவினை சாப்பிடுகிறார்கள். நம்முடைய உணவு முறைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டோம் என்றால் நமது உடல் மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்