தொடையில் உள்ள சதை குறைய உணவு மற்றும் யோகா | How To Reduce Thigh Fat in Tamil
Thodai Sadhai Kuraiya in Tamil: மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில் நம்முடைய பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறையால் உடல் எடை அதிகரிப்பு என்பது இப்போது அதிகமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் அந்த கொழுப்பானது நாளடைவில் தொடை பகுதியில் சேர்ந்து தொடையில் அதிகப்படியான சதை உருவாக காரணமாகிறது.
தொடையில் உள்ள சதையை குறைக்க உணவில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, உடற்பயிற்சியையும் பின்பற்ற வேண்டும். தொடையில் உள்ள சதையை குறைக்க என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றியும், மேலும் என்னென்ன யோகா செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம்.
கைகளில் உள்ள சதையை குறைக்க சில பயிற்சிகள் |
தொடை சதை குறைய உணவு -Thodai Sathai Kuraiya Tips in Tamil
- உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கியமான காரணம் நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பு நிறைந்த உணவுகள் அதாவது வெண்ணெய்,நெய், மீன், முட்டை மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி ஆகியவற்றை உண்பதால் கொழுப்பு அதிகரிக்க காரணமாகிறது.
- உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க கலோரி குறைந்த அளவு உள்ள உணவுகளை உண்ண வேண்டும். முழு தானியங்கள், பழங்கள், கீரைகள், வெள்ளை மீன்கள், காய்கறிகள் மற்றும் lean meats போன்ற கலோரி குறைவான உணவுகளை எடுத்து கொள்ளலாம். இது போன்ற கலோரி குறைந்த உணவுகளை உண்டால் எளிதாக உடலில் சேர்ந்திருக்கும் அதிகமான சதையை குறைக்க முடியும்.
தொடை சதை குறைய உணவு – கார்போஹைட்ரெட் குறைவாக உள்ள உணவு:
- நம்மில் பலர் கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளையே உண்கிறோம். கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளை உண்பதால் கொழுப்பு சேர்வது மற்றும் இன்சுலின் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் சதையை குறைக்க கார்போஹைட்ரெட் குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
- ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, தேங்காய் எண்ணெய், காலிஃபிளவர், பச்சை காய்கறிகள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற கார்போஹைட்ரெட் குறைந்த உணவுகளை உண்பதால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகமான சதையை குறைக்க முடியும்.
புத்துணர்ச்சி அதிகரிக்க கிரீன் டீ – How to get Slim leg in tamil:
- நம் உடல் புத்துணர்ச்சியாக இருக்க நாம் அதிக அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடையும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தண்ணீர்க்கு பதிலாக கிரீன்டீ எடுத்துக்கொள்ளலாம். இதில் அதிகபடியான ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து ஆற்றலை கொடுக்கிறது.
தொடை சதை குறைய உணவு – How To Reduce Inner Thigh Fat:
- இரவு உணவை நாம் சற்று சீக்கிரமாக எடுத்துக்கொள்ளுதல் அவசியமானது. ஏனென்றால் நாம் இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் உறங்க தான் பார்ப்போம் அதனால் சாப்பிட்ட உணவு அப்படியே நம் உடலில் கொழுப்பாகத்தான் மாறும். உறங்குவதற்கு ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டால் உணவு செரித்து உடலை கட்டு கோப்புக்குள் வைத்து கொள்ளும்
- சிலர் உடல் எடையை குறைப்பது என்றாலே சாப்பிடாமல் இருப்பது என்று முடிவு செய்வர். சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடை குறையாது அதற்கு பதிலாக தங்களுடைய ENERGY குறைந்து தங்களுடைய அன்றாட வேலையை செய்ய முடியாமல் போகலாம். உடல் எடையை குறைப்பதற்கு ஒரு சிறந்த வலி கொழுப்பு, கார்போஹைட்ரெட், கலோரி குறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காமல் உடலை கட்டு கோப்பாக மற்றும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளலாம்.
உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும் |
தொடை சதை குறைய உடற்பயிற்சி – Thodai Kuraiya Tips in Tamil
- உடற்பயிற்சி என்பது பருமனானவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி அவசியமானது.
- தொடை பகுதியில் உள்ள சதை குறைய ஒரு எளிய உடற்பயிற்சி கார்டியோவஸ்குலர். இந்த உடற் பயிற்சியை செய்வதால் உடலில் கீழ்பாகம் குறையும். இதை ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செய்தாலே போதும். தொடையில் உள்ள சதை குறைந்து காணப்படும்.
தொடை சதை குறைய உடற்பயிற்சி – ஜாக்கிங்:
- ஜாக்கிங் இது தொடையில் உள்ள சதை குறைய ஒரு எளிமையான உடற்பயிற்சி. ஜாக்கிங் செய்வதற்கு ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பணம் செலவழிக்க தேவையில்லை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் தொடை ஒரு shape பெறுகிறது அது மட்டும் இல்லாமல் மூச்சினை சீர் செய்யவும் உதவுகிறது.
தொடை சதையை குறைக்க யோகா – தொடையில் உள்ள சதை குறைய HALF SITTING:
- ஸ்குவாட்ஸ் தசைகளை குறைக்க உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் HALF SITTING முறையில் மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதால் சதைகளை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் கால்களை வழுவாக்கவும் உதவுகிறது.
தொடை சதையை குறைக்க நீச்சல் – How To Reduce Thigh Fat:
- நீச்சல் அடிப்பது உடல் எடையை குறைக்க ஓரு சிறந்த உடற்பயிற்சி. ஒரே நேரத்தில் அனைத்து தசைகளுக்கும் வேலை கொடுக்கும் ஒரே உடற் பயிற்சி நீச்சல். தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் மூச்சினை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
தொடை சதையை குறைக்க யோகா – லெக் கிக் எளிமையான பயிற்சி:
- தொடையின் தசையை குறைக்க லெக் கிக் எளிமையான பயிற்சி ஆகும். சப்போர்ட்காக CHAIR அல்லது வேறு எந்த பொருளையோ வைத்து கொள்ளுங்கள். உங்கள் காலினை எவ்வளவு தூரம் பின்னோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக தூக்க வேண்டும். அடுத்த கால் இப்படியே மாறி மாறி குறைந்தது 20 முறை செய்திட வேண்டும். இந்த முறையை பாலோ செய்து வந்தால் தொடையில் உள்ள சதை குறைய தொடங்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |