தொண்டை புண் அறிகுறிகள் | Sore Throat Symptoms in Tamil
இப்போது நம்முடைய உணவு முறையில் இருக்கும் மாற்றம் காரணமாக நமக்கு அடிக்கடி தொற்று ஏற்படுகிறது. அதுவும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தொண்டைப்பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். இந்த அழற்சி வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது, அப்படி ஏற்படும் நோய்களில் ஒன்று தான் தொண்டை அல்சர், இந்த தொகுப்பில் தொண்டையில் அல்சர் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அறிகுறிகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தொண்டை புண் வர காரணம்:
தொண்டையில் புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வைரஸ் அல்லது ஜலதோஷமாக இருக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, இதனால் தொண்டை வலி அல்லது புண் ஏற்படலாம்.
அழற்சி, சுற்றுசூழல் மாசுபடுவதால், புகைபிடித்தல், மது அருந்துதல், எச்.ஐ. வி, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் தொண்டையில் புண் ஏற்படும்.
தொண்டை அல்சர் அறிகுறிகள்:
தொண்டையில் ஏற்படும் புண் அல்லது வலியை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
சாப்பிடும்போது, பேசும்போது தொண்டையில் வலி ஏற்படுதல், அரிப்பு போன்றவை தொண்டையில் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
கழுத்து சுரப்பிகளில் அழற்சி, தொண்டை கம்மி போவது, சதை வீக்கம், தொண்டைச் சதையில் சீழ் வைப்பது போன்றவை தொண்டையில் புண் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
சில வைரஸ் தொற்றால் தொண்டை வலியோடு, காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், வாந்தி, சளி, தும்மல், உடலில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
சளியில் இரத்தம் கலந்து வெளிப்படுவது, மூச்சு திணறல், வாயை திறப்பதில் சிரமம், ஒரு வாரத்திற்கு மேலாக குரலில் மாற்றம் காணப்படும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் தொண்டை புண் 5 முதல் 7 நாட்களுக்குள் எந்த விதமான மருந்துகளும் எடுக்காமல் சரியாகி விடும். தொண்டையில் அதிக வலி அல்லது மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் அதற்கு பின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அதிலும் குறிப்பாக கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை கிருமிநாசினியை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இருமல், தும்மல் இருப்பவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக அளவு உட்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு உணவுப்பொருளையும் சுத்தம் செய்யாமல் சாப்பிட கூடாது.
வெந்நீரில் சிறிதளவு கல் உப்புடன், எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் குடித்து வந்தால் தொண்டை புண் அல்லது வலி சரியாகிவிடும்.
சூடான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தொண்டையில் வைரஸால் ஏற்பட்ட புண் குணமாகிவிடும்.