தொப்பை குறைய என்ன சாப்பிட வேண்டும்?
இப்போல்லாம் ஆண், பெண் நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தொப்பை தான். இந்த தொப்பையை குறைப்பதற்கு நிறைய டயட் முறையிகளை பின்பற்றி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தொப்பை குறையவே குறையாது. ஆனால் நீங்கள் சரியான அளவு உணவை சரியான நேரத்தில் உணவருந்தினீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைக்க முடியும். அதேபோல் சாப்பிட்ட உடனேயே தூங்கவோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் கண்டிப்பாக தொப்பை போடும் மேலும் உடல் உடையும் அதிகரித்துவிடும். ஆகவே சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடக்கவும். இவ்வாறு செய்வதினால் உடல் எடை குறைவதை நீங்கள் உணரமுடியும். சரி வாங்க தொப்பையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய சில விஷயங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உடல் எடை குறைய வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உடல் எடை குறைக்க உதவும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் விளங்குகிறது செவ்வாழை, பூவம் பழம், கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய வாழைப்பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இவற்றில் உள்ள அதிகளவு B6 மற்றும் நார்சத்து இருப்பதனால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும்.
முழு தானிய ரொட்டி:
வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது. உலகிலேயே மிக குறைந்த வகையில் கிடைக்கும் ஆரோக்கியமான நட் உணவில் முதன்மை இடம் வகிப்பது வேர்க்கடலை தான். இதன் மூலம் ஆரோக்கியமான புரதமும் கிடைப்பதால், உடற்பயிற்சி செய்வோருக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருளாக விளங்குகிறது. ஆகவே இரவில் பசி எடுத்தால், வேர்க்கடலை வெண்ணெய் தடவி 2 துண்டுகள் முழு தானிய ரொட்டியை சாப்பிடலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → உடல் எடை குறைய கலோரி குறைந்த உணவுகள்
உடல் எடையை குறைக்கும் தயிர்:
எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தயிரில் இருக்கும் ஒரு நல்ல அளவு புரதம் பெரிதும் உதவுகிறது. தயிரில் இருக்கும் புரதம் பசியுணர்வை கட்டுக்குள் வைத்து தேவையற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறது.
மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும், உடல் எடையை சீராக்குவதிலும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது கால்சியம் நிறைந்துள்ள தயிர் எடையை குறைக்க உதவுகிறது.
உடல் எடை குறைய பாதாம்:
உடல் எடையை குறைக்க உதவும் உணவு வகைகளில் பாதாம் பருப்புக்கு முக்கிய பங்குண்டு. இதில் ஒமேகா 9, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டதாகவும் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகும்.
உணவு சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் அமிலத்தன்மை, வீக்கம் போன்றவை ஏற்பட்டு நாம் உண்ணும் உணவு கெட்ட கொழுப்புகளாக உடலில் தேங்குகிறது இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் முழு பாதாமை பருப்பை தோலுடன் சேர்த்து அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் உடல் எடையை எளிதில் குறைக்க வழி வகுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → உடல் எடை குறைய உணவு அட்டவணை
இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Heath Tips In Tamil |