தொப்பை குறைய யோகாசனம்..! Thoppai Kuraiya Exercise in Tamil..!

தொப்பையை குறைக்க யோகாசனம்..!

Thoppai Kuraiya Exercise: வணக்கம் நண்பர்களே.. ஒரு காலத்தில் ஒருவருக்கு லேசாகத் தொப்பை விழுந்தால், கூட `என்ன.. நாப்பது வயசுக்குள்ளயா?’ தொப்பை விழுந்துடிச்சி என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். ஆனால் இன்றைக்கு இளம் வயதினரைக்கூட விட்டுவைக்காமல், பரவிக்கொண்டேயிருக்கிறது தொப்பை.

மேலும் உடல் பருமன் பிரச்சனையும் அதிகரித்து கொண்டிருக்கிறது. நமது உடலில் பல உடல்நலக் கோளாறுகளுக்கு அடித்தளமாக இருப்பவை இந்த இரு பிரச்சனைகள் தான் முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.

ஆகவே நமது உடலை நாம் தான் கச்சிதகமாக வைத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய யோகாவில் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதனை படித்து அந்த ஆசனங்களை தினமும் செய்து வருவதன் மூலம் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

பச்சிமோத்தாசனம் (Paschimottanasana):

பச்சிமோத்தாசனம்

கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளையும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.

பலன்கள்:

தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

புஜங்காசனம் (Bhujangasana):

புஜங்காசனம்

தரையில் குப்புற படுக்க வேண்டும். கைகளை தரையில் ஊன்றி தலையை மட்டும் உயர்த்தவும். வயிற்று பகுதியை தூக்க கூடாது. மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.

பலன்கள்:

தினமும் இந்த ஆசனம் செய்து வந்தால் வயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கும், சதை குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பாதஹஸ்தாசனம் (Padha Hastasana):

Padha Hastasana

இந்த பாதஹஸ்தாசனம் நின்று கொண்டு செய்யும் பயிற்சி ஆகும். அதாவது நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.

பலன்கள்:

இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.

தனுராசனம் (Dhanurasana):

Dhanurasana

இது குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி ஆகும். மேல் படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

ஜானுசிரசாசனம் (Janu Sirsasana):Janu Sirsasana

அமர்ந்த நிலையில் செய்யும் பயிற்சி இது. ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும்.

பலன்கள்:

இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி, தொப்பை குறைக்க உதவும்.

யோகா வகைகள் மற்றும் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil