வாட்டர் ஆப்பிள் பயன்கள் | Paneer Fruit Benefits in Tamil
நண்பர்களே வணக்கம் உங்களின் ஆரோக்கியத்தில் பாதுகாப்பை காக்கும் வகையில் தினமும் உங்களுக்கு நன்மை தரும் வகையில் நீங்கள் சாப்பிடும் பொருள்களின் நன்மைகளை தெரிவிக்கும் வகையில் உங்களுக்கேற்று தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன பயன்கள் உள்ளது என்பதை முன் பதிவில் பதிவிட்டு இருக்கிறோம். அதனை படித்து பயன்பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று பன்னீர் ஆப்பிள் பயன்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவு அதனை இப்போது தெளிவாக படித்து தெரிந்துகொள்ளவோம்.
ஆப்பிள் பழம் நன்மைகள் |
ரோஜா ஆப்பிள்:
- ரோஜா பூக்கள் தெரியும் இது என்ன புதுமையாக பெயர் போல் உள்ளது. ரோஜா ஆப்பிள் என்று சொல்கிறார்கள்..?
- இது ஆப்பிள் வகையை சார்ந்திருப்பதால் இந்த பழத்தை ரோஜா ஆப்பிள் என்று சொல்கிறார்கள் என்று தான் நினைக்கிறீர்கள். இல்லை இதனை பார்ப்பதற்கு மட்டும் தான் ஆப்பிள் நிறத்தில் இருக்கும்.
- இதன் சுவை ஆப்பிள் போல் இருக்காது. அதற்கு நேர்மாறாக கொய்யா பழத்தை போல் தான் இதன் சுவை இருக்கும்.
- இந்த பழத்தை வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டு வருகிறார்கள். இந்த பழத்தை பார்க்கும் போதே அதனை சாப்பிடவேண்டும் என்ற ஆசை வரும் ஏனென்றால் அதன் நிறம் அழகாவும் பார்ப்பதற்கு கண்ணாடி போலவும் இருக்கும்.
- இந்த பன்னீர் ஆப்பிளுக்கு தண்ணீர் ஆப்பிள் என்று பெயர் உண்டு, இதற்கு இந்தியாவில் ஜாமுன் பழம் என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
பன்னீர் ஆப்பிள் பயன்கள்:
- பொதுவாக எல்லா பழங்களிலும் நன்மைகள் அதிகம் அதுவும் ஆப்பிளில் அதிகம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல்தான் இந்த பன்னீர் ஆப்பிள் என்ற பெயர் கொண்ட ரோஜா ஆப்பிளில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குறிப்பாக மருத்துவத்துக்கு பெரிதும் உதவுகிறது. அதனை இப்போது பார்க்கலாம்.
- இந்த பன்னீர் ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஏ, நியாசின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து என ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது.
- ரோஜா ஆப்பிள் மரத்தின் மரப்பட்டைகளால் தயாரிக்கப்படும் ஒரு வகை காபி தூள் மலேசியாவில் த்ரஷ் என்னும் சிகிக்சைக்காக இந்த ரோஜா ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.
- ரோஜா ஆப்பிள் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
- பன்னீர் ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகிறது. பூக்களை தண்ணீரில் போட்டு நன்கு காய்த்து குடித்து வர காய்ச்சல் சரியாகிவிடும்.
- ரோஸ் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது.
பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் |
- பன்னீர் ஆப்பிளின் இலைகள் கண்களில் வரும் கட்டி மற்றும் வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது பயனளிக்கிறது.
- பன்னீர் ஆப்பிள் வேர் கால்-கை வலிப்பு பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
- இந்த பன்னீர் ஆப்பிளில் அதிகம் எதிர்ப்புகள் உள்ளதால் குழந்தைகளுக்கு அதிகம் தரலாம். அவர்களுக்கு அதிகம் எதிர்ப்பு சக்திகளை தரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |