நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் | Fiber Rich Food in Tamil
Fiber Rich Foods in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நார்ச்சத்து என்பது உடலால் ஜீரணிக்க முடியாத ஒருவகை கார்போஹைட்ரெட் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Fiber என்று கூறுவார். இந்த பைபர் இரண்டு வகைப்படும் அவை Soluble Fiber மற்றும் Insoluble Fiber. Soluble Fiber என்பது உடம்பில் சர்க்கரை அளவு மற்றும் கொலெஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்துகிறது. Insoluble Fiber செரிமான கோளாறு, piles மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தடுப்பதற்கு உதவுகிறது. இவ்வளவு நண்மை உள்ள இந்த நார்ச்சத்து எந்தெந்த உணவில் இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா வாங்க பார்ப்போம்.
நாம் அனைவருமே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தெரிந்துகொள்ள விரும்புவோம் அதனால் தான், உங்களுக்கு பயனுள்ள வகையில் நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் என்ன என்பதை விவரித்துள்ளோம்.
நார்ச்சத்து உள்ள பழங்கள் – Fiber Rich Fruits in Tamil:
ஆப்பிள்:
- ஆப்பிள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்த பழத்தில் 2.5G நார்ச்சத்து உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும் ஏனென்றல் தோலில் தான் அதிக அளவு Fiber உள்ளது.
உடல் எடை குறைய நார்ச்சத்து உணவுகள் |
கொய்யாப்பழம்:
- ஒரு பழத்தில் 5g அளவு நார்ச்சத்து உள்ளது. ஒருநாளைக்கு நமக்கு தேவையான 25% நார்ச்சத்தை இந்த பழம் கொடுக்கிறது. மேலும் இந்த பழத்தில் வைட்டமின்-சி, A மற்றும் B6 மற்றும் தாது உப்புகள் இருப்பதனால் இது உடலுக்கு வளர்ச்சியை கொடுக்கிறது.
வாழைப்பழம்:
- இந்த பழம் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் வாங்கி உண்ணக்கூடிய பழமாகும். ஏராளமான வகைகள் வாழைப்பழத்தில் இருக்கின்றன அதில் குறிப்பாக நாட்டு வாழைப்பழத்தில் அதிக அளவு Fiber உள்ளது. 100g வாழைப்பழத்தில் 2.6g அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
- Blood Pressure-ஐ கட்டுப்படுத்தவும் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.
நார்ச்சத்து உள்ள தானியங்கள்:
பச்சை பட்டாணி மற்றும் சுண்டல்:
- அனைத்து பட்டாணி மற்றும் சுண்டல் வகைகளிலும் அதிக அளவு நார்ச்சத்தை கொண்டிருக்கின்றன. இதில் 17g நார்ச்சத்து அடங்கியுள்ளன.
- ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 68% இதன் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிறது. இதை குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸ் ஆக கூட பரிமாறலாம்.
உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள் |
பச்சை பயிறு மற்றும் கருப்பு உளுந்து:
- இந்த தானியங்களில் 16g அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இவற்றில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நம் உடலுக்கு கிடைக்கிறது.
- இந்த தானியங்களை தோல் நீக்காமல் உபயோகப்படுத்துவது சிறந்தது.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்:
கேரட் மற்றும் பீட்ருட்:
- காய்கறி வகைகளில் கேரட் மற்றும் பீட்ருட்டில் 2.8g பைபர் உள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின் A, K, B6, இரும்புச்சத்து, மெக்னீசியம், Zinc மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவு உள்ளது.
- இதை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.
Fiber Rich Food in Tamil:
பேரிக்காய்:
- இந்த பழத்தில் 3.1g அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் மற்றும் புரதசத்து உள்ளது. இந்த பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை வள்ளி கிழங்கு:
- கிழங்கு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. 100g சர்க்கரை வள்ளி கிழங்கில் 2.5g பைபர் உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மலச்சிக்கலை குணப்படுத்தவும் மற்றும் செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.
உடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள் |
பாதாம்:
- பாதாமில் 13.3கி அளவு பைபர் உள்ளது. இரவு படுக்கைக்கு முன் பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.
- இந்த பாதாமில் Phosphorus- 5.69mg, Potassium – 8.74mg, Sodium – 0.01mg, Zinc – 0.04mg மற்றும் Protein – 0.26g போன்ற புரோட்டீன்கள் உள்ளது.
சப்ஜா விதை:
- சப்ஜா விதை இதனை ஆங்கிலத்தில் Chia Seed என்று அழைப்பார் இதில் 34.4கி அளவு நார்ச்சத்து உள்ளது. ஒரு ஸ்பூன் அளவு சப்ஜா விதையை நீரிலே ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.
- இதனை இளநீரில் அல்லது ஜூஸில் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் சூட்டை தனிப்பதற்கும் மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |