மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Moolam Kunamaga Tips

மூல நோய் குணமாக செய்ய வேண்டியது – Moolam Kunamaga Tips

வணக்கம் நண்பர்களே பைல்ஸ் தொந்தரவு உள்ளவர்கள் என்ன உணவு முறையை மேற்கொள்ள வேண்டும்.. என்னென்ன உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என்ன உணவுகளில் மூலம் நோயிக்கு சிறந்தது. என்ன உணவுகள் மூலம் நோயினை மேலும் அதிகரிக்கும் போன்ற தகாள்வகளை இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மூலம் நோய் எப்படி உருவாகிறது?

இந்த பைல்ஸ் நோய் எப்படி உருவாகிறது என்றால், மலம் துவாரத்தில் மலமானது ரொம்ப கெட்டியாக கடின தன்மையுடன் முக்கி வெளியே போகும்போது, இரத்த நாங்கள் தளர்வடைவதால் ஏற்படுவதுதான் பைல்ஸ். இத்தகைய பைல்ஸ் நோயை நாம் உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். அத்தகைய உணவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..! Moolam Kunamaga Tips..!

மூல நோய் குணமாக தண்ணீர்:

பைல்ஸ் நோய் உள்ளவராகில் ஒரு நாளைக்கு குறைந்து 2 முதல் 2 1/2 லிட்டர் தண்ணீரை கட்டாயம் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும் என்றால். அப்பொழுது தான் மலத்தை சரியான நிலையில் வெளியேற்ற உதவும். ஆகவே மூலம் நோய் உள்ளவர்கள் தினமும் தண்ணீர் அதிகாவு அருந்துங்கள்.

மூல நோய் குணமாக நார்ச்சத்து உணவுகள்:

மூலம் நோய் உள்ளவர்கள் தங்களது உணவு முறையில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது. ஆகவே நார்ச்சத்து அதிகம் உள்ள உறவுகள், காய்கறிகள், கீரைகளை அதிகளவு எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு நார்ச்சத்து அதிகம் நிறைந்த உறவுகளை எடுத்து கொள்வதினால் மலம் கெடியாவது தடுக்கப்படும். சரியான நிலையில் மலம் வெளியேற நார்ச்சத்து உணவுகள் உதவி செய்யும்.

மூல நோய் குணமாக நீராவி உணவுகள்:

பைல்ஸ் பிரச்சனை உள்ளார்கள் நீராவியில் செய்யப்பட்ட உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ளலாம். இதனால் மலம் கெட்டியாவது தடுக்கப்படும்.

மூல நோய் குணமாக சின்ன வெங்காயம்:

மூலம் நோய் உள்ளவர்கள் உங்கள் உணவு முறையில் சின்ன வெங்காயத்தை தினமும் அதிகளவு சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் காலையில் எழுந்த உடன் பல் துலக்கிவிட்டு சிறிதளவு சின்ன வெங்காயத்தை சப்பிட்டுவிட்டு வெந்நீர் குடிங்க இவ்வாறு செய்வதினால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மூல நோய்க்கு வெந்தயம்:

வெந்தையம் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள். இந்த வெந்தியத்தை மூலம் நோயினால் தினமும் அவஸ்தைப்படும் நபர்கள் இரவு சிறிதளவு வெந்தியதை ஊறவைத்து. மருந்தால் காலை வெறும் வயிற்றில் அந்த நீருடன் வெந்தியதை பருகி வந்தால் மூலம் பிரச்சனை வெகு சீக்கிரம் சரி ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்→ மூலம் நோய் அறிகுறிகள்

மூலம் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஜங் புட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கேழ்வரகை மூலம் நோய் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் மலம் கடினமாகும், ஆகவே மலம் கழிக்கும் போது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தவும். ஆகவே உங்கள் உணவில் கேழ்வரகு சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோல் நீங்கள் கோதுமை, மைதா போன்றவற்றில் செய்யப்பட்ட உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் பையில் பிரச்சனை உள்ளவர்கள் உங்கள் உணவு முறையில் அதிகளவு காரம் சேர்த்துக்கொள்ளவே கூடாது.

மூலம் நோய் உள்ளவர்கள் உங்கள் சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் பருப்பு வகைகளை முற்றிலும் தவரிக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்