மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்!
மூல நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அது சாப்பிடலாமா? இது சாப்பிடலாமா? என்ற கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் எதையாவது சாப்பிட்டுவிட்டு அதனால் ரொம்ப அவதிப்பட்டு விட்டோம் என்றால் என்ன செய்வது, என்பதால் சில உணவுகளை தவிர்ப்பார்கள். மூல நோய் உள்ளவர்கள் இந்தந்த உணவுகளை தான் சாப்பிடவேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கின்றது. நீங்களும் இந்த பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கானது தான் இந்த பதிவு.
இங்கே நங்கள் உங்களுக்கு தேவையான தகவலாக மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி தான் கூறுகின்றோம். அதில் மீனும் இருக்கின்றதா என்று இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
மூல நோய் பிரச்சனை
“ஹெமோர்ஹாய்ட்ஸ்” அதாவது மூலம் என்ற சொல் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் விரிவாக்கப்பட்ட மற்றும் வீங்கிய நரம்புகளை விவரிக்கிறது. இது மிகவும் பொதுவான பிரச்சினை. தகுந்த உணவு பழக்கங்கள் மற்றும் சரியான நடைப்பயிற்சி எடுத்துக்கொண்டால் இது மிக விரைவாக குணமாகிவிடும்.
Moola Noi Ullavargal Meen Sapidalama?
பல பேருக்கு உள்ள சந்தேங்களில் ஒன்று தான் இது அதாவது மூல நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா? இதற்கான தெளிவான பதிலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த மூல பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் குறைந்தளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. என்னனா உணவுகள் என்றால் பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகும். இதை நம்மால் ஒரேதறியாக குறைக்கமுடியாது முடிந்தவரை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கலாம். இந்த உணவுகளுக்கு பதிலாக முழு தானிய உணவுகளான பழுப்பு அரிசி, ஓட்மீல் மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்றவற்றைத் எடுத்துக்கொள்ளலாம்.
இதனைத்தொடர்ந்து தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்.
மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..!
Piles பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா?
பலபேருக்கு இருக்கும் சந்தேகமான Piles பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது என்று நம்புகின்றேன். இந்த உணவு மட்டுமின்றி மிளகாய், கடுகு, மிளகு, இஞ்சி, பூண்டு, வறுத்த உணவுகள், துரித உணவுகள், பீட்சா, பர்கர், நொறுக்குத்தீனிகள் போன்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |