வாத நீர் என்றால் என்ன?

Advertisement

வாத நீர் வெளியேற

ஹாய் பிரண்ட்ஸ் ஆரோக்கிய பிரச்சனைகளில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாதம். இவற்றில் நிறைய வகைகள் உள்ளன. இந்த வாதம் பிரச்சனைகளில் ஒன்று தான் வாத நீர். இத்தகைய வாதம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடலில் அங்கங்கே வீக்கங்கள் வருவதை பார்க்க முடியும். இந்த வீக்கங்களில் வலி ஏற்படுத்தக்கூடாதாகவும், உடல் பாகங்களை அசைக்க முடியாத அளவுக்கு வலிகளை ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனைக்கு சரியான சிகிச்சை முறை இருக்க வேண்டும். சரி வாங்க இந்த பதிவில் வாத நீர் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்

வாத நீர் என்றால் என்ன?

வாத நீர் என்பது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளில் தேங்கி நிற்கும் எலும்பு மஜ்ஜை சார்ந்த திரவம் ஆகும்.. அப்போது மூட்டுக்கள் வீங்கி வலி மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்துவதை ஆர்த்ரைட்டிஸ் என்பார்கள்.. இதைக்கான அறிகுறிகள் என்னவென்றால் கை கால் மூட்டுகளில் வீக்கம்.. சிவந்து போவது. மூட்டுகளில்.. நீர் தேங்கி வலி ஏற்படும்.

இந்த வாத நீர் தேங்குவதற்கான முக்கிய காரணங்கள்:

யூரிக் ஆசிட்:

யூரிக் ஆசிட்

யூரிக் ஆசிட் உங்கள் உடலில் அதிகம் உள்ளது என்றால் ங்களது கை கால்களில் உள்ள மூட்டுக்கள் அனைத்தும் வீங்கி போகும். அதை கௌட் (GOUT) என்பார்கள் மருத்துவர்கள். நீங்கள் உண்ணும் புரதம் நிறைந்த உணவுகளை உங்களது சிறுநீரகம். சரிவர கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலையில் இது போன்ற கை கால் மூட்டுகளில் வாத நீர் தேக்கம் ஏற்படும்.

சோரியாசிஸ்:

சோரியாசிஸ் என்ற ஆட்டோ இம்யூன் வகைதொந்தரவு இருக்கும் போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே உடலில் அரிப்பு மற்றும் தோல் செதில்கள் உதிரும் தன்மையை கொடுக்கும. குறிப்பாக இந்த பிரச்சனை குளிர் காலங்களில் இந்த தொந்தரவு அதிகமாக இருக்கும் போது மூட்டு வீக்கம் ஏற்படும்.

கால்சியம் குறைபாடு:

கால்சியம் சத்து என்ற சுண்ணாம்பு சத்து குறைவாக இருக்கும் போது. மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு. எலும்பு தேய்மானம் ஏற்படுவதால். மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம் வலியை ஏற்படுத்தும் இதை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்பார்கள்.

தொற்று நோய்:

சிறுநீரக தொற்று நோய் மற்றும பிறப்புறுப்பு மற்றும் குடல் சார்ந்த தொற்றுகள் காரணமாக.. இவ்வகை மூட்டு வீக்கம் மற்றும் வலி ஏற்படும். வாயு காரணமாக உடலில் அங்கங்கே வீங்கி வலி ஏற்படுவது இவ்வகை தான். சால்மோனல்லா மற்றும் க்ளாமிடீயா வகை பாக்டீரியாக்கள் இதை ஏற்படுத்தும். இதை ரியாக்டிவ் ஆர்த்ரைட்டிஸ் என்பார்கள்.

செப்டிக்:

சரியான ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து, மூட்டுகளில் தேங்கி நிற்கும் நீரை வெளியே எடுக்காமல் தொற்று நோய் அதிகரித்து, உடல் நலம் ஆபத்தான நிலையில் செப்டிக் நிலையை எட்டும். மூட்டுக்களில் தொற்று நோய் ஏற்பட்டு ஏற்கனவே அதிக அளவில் சர்க்கரை நோய் மற்றும் காசநோய் ஹெச் ஐ வி பாதிப்பு இருப்பவர்கள்.. இந்த செப்டிக் ஆர்த்ரைட்டிஸ் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

வாத நீர் நீங்க இயற்கை மருத்துவம்:

இந்த பிரச்சனையை குணம்படுத்த சிறந்த இயறக்கை வைத்தியமுறை இதுவென்று சொல்லலாம். விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தாளித்து ரசம் செய்து சாப்பிடலாம். இது மட்டுமில்லாமல் மூக்கிரட்டை, சோம்பி, சாம்பல் பூசணி ஆகியவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வாத நீர் வெளியற உதவியாக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement