வாழை இலை நன்மைகள் | Banana Leaf Benefits in Tamil
தெய்வீக மரமாக கருதப்படுகிறது இந்த வாழை மரம். வாழை இலை விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில் கலந்த ஒன்றாகும். வாழை மரத்தில் இருந்து கிடைக்கின்ற பட்டை, பூ, தண்டு, பழம், காய் போன்ற அனைத்தும் பல மருத்துவ குணங்களை அடக்கியுள்ளது. எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. நம் முன்னோர்கள் வாழை இலையை உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தி வந்தனர். ஒரு சிலருக்கு இன்றும் நாம் ஏன் வாழை இலையில் உணவு சாப்பிடுகிறோம், அதனால் நமக்கு என்ன நன்மை என்று தெரிந்துக்கொள்ளாமலே இருக்கிறார்கள். நாட்டின் பாரம்பரியமிக்க மரமாக இருக்கும் வாழை மரத்தில் உணவு சாப்பிடுவதால் உடலுக்கு அப்படி என்ன நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
தொற்று நோயிலிருந்து பாதுகாக்க:
நாம் எடுத்துக்கொள்கின்ற உணவில் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணிய கிருமிகள் தொற்றிக்கொள்வதால் உணவில் நச்சுத்தன்மை அதிகரித்து உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. வாழை இலையில் உணவு சாப்பிடுவதால் வாழை இலையில் இருக்கின்ற கிருமி நாசினி வஸ்துக்கள் உணவுகளில் தங்கி இருக்கின்ற கிருமிகளை முற்றிலுமாக அழித்து நோய்களிலிருந்து பாதுகாத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
பசி உணர்வு அதிகரிக்க:
சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டினாலும், மன அழுத்தம் அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் எப்போதும் அவர்களுக்கு பசி என்ற உணர்வே இருக்காது. இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகரித்து நன்றாக சாப்பிடும் நிலை உருவாகும். சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும் சரி உடனே ஜீரணம் ஆகிவிடும்.
![]() |
நீண்ட ஆயுள் பெற:
நாம் இப்போது சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் கூட பல ரசாயண பொருள்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது மாதிரியான தட்டுக்களில் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் இளம் வயதிலையே வந்துவிடும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நீண்ட ஆயுளோடு நெடுநாள் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான உணவுகளும், அந்த ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டதால் தான். நாமும் நம் சந்ததியினரும் நெடுநாள் வாழ தினமும் உணவை வாழை இலையில் சாப்பிட வேண்டும்.
வயிற்றுப்புண் குணமாக:
வயிற்று வலி, வயிற்று புண்கள், வயிற்று சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் எதனால் வருகிறது என்றால் நீண்ட காலமாக அலுமினியம் உலோகத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிறு சம்மந்த பிரச்சனை இருப்பவர்கள் வாழை இலையில் உணவை சாப்பிடும் போது வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்றாக செரிமானப்படுத்திக்கிறது. மேலும் வாழை இலையில் சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.
![]() |
சரும வறட்சி நீங்க:
வயது அதிகமாகும் போது எல்லோருமே சந்திக்கக்கூடியது தோல் சரும பிரச்சனை. தோலில் ஈரப்பதம் குறைந்து வறட்சி தன்மை ஏற்பட்டு தோலில் சுருக்கங்கள் உண்டாகி சரும அழகையே கெடுத்துவிடும். எப்போதும் சருமம் அழகாக, தோலில் நீர் வறட்சி ஏற்படாமல் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க தினமும் மூன்று வேலையும் நாம் சாப்பிடும் உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் எப்போதும் சருமத்திற்கு இளமையான தோற்றம் கிடைக்கும்.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |