சர்க்கரைவள்ளி கிழங்கு தலை முடிக்கும், முகத்திற்கும் இவ்வளவு நன்மைகளை அளிக்கிறதா?

Benefits of Sweet Potato For Skin And Hair in Tamil

Benefits of Sweet Potato For Skin And Hair in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் கிழங்கு வகைகளை சார்ந்த சர்க்கரை வள்ளி கிழங்குகளை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு அளிக்கும் நன்மைகளை மட்டுமே தெரியும்,

ஆனால் இதனை உட்கொள்ளவதால் தலை முடிக்கும், தோல்களுக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி உனக்கு தெரியுமா? முக்கியமாக குளிர்காலத்தில் கிழங்குகள் சாப்பிடுவது நல்லது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் உடலை சூடாக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள இது பெரும் பங்கு வகிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள் | Sweet Potato Nutrition: 

நாம்  தினமும் சாப்பிடும் உருளைக்கிழங்கை விட கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின் எ போன்றவைகள் சர்க்கரை வள்ளிகிழக்கில் அதிக காணப்படுகிறன. மேலும் இதில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு சத்து, சோடியம், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சிறிதளவு காணப்படுகிறது.   விஞ்ஞானிகள் ஆய்வில் சர்க்கரைவள்ளி கிழக்கில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கிழங்கை பற்றி தெரிந்துகொள்ளஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்கள்..!

சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் – Sweet Potato Benefits in Tamil:

sweet potato benefits in tamil

இதில் ஏராளமான நன்மைகள் மறைந்துள்ளது அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால்

  1. உடல் எடையை குறைக்க உதவும்
  2. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்
  3. பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது
  4. வயிற்று பூண் அல்சரை குணமாக்கும்
  5. அல்சருக்கு உடனடி தீர்வு தரும்

இதேபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள 👉👉 சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் முழுமையான பதிவு 

Sweet Potato Hair Growth in Tamil:

Sweet Potato Hair Growth in tamil

சர்க்கரை வள்ளி கிழங்கை உட்கொள்ளவதால் தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக உள்ளது. ஏனென்றால் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்  மற்றும் வைட்டமின் சி தலைமுடியின் வேர் வரை சென்று தலை முடி உதிர்வதை தடுக்கிறது. மேலும் தலைமுடியை வலுவாகிறது.

Sweet Potato Skin Benefits in Tamil:

Sweet Potato Skin Benefits in Tamil

சர்க்கரை வள்ளிகிழங்கு உட்கொள்ளவதால் சருமத்திற்கு நல்லபண்புகளை அளிக்கிறது. இது முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் வைக்க உதவுகிறது.

முக்கியமாக இந்த பிரச்சனை அனைவர்க்கும் உள்ளது அது என்னவென்றால் முகத்தில் எண்ணெய் வழிவது. சர்க்கரை வள்ளி கிழங்கை பச்சையாக முகத்தில் தடவி வந்தால் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips