Can I Take The Pill With Tea in Tamil
வணக்கம் நண்பர்களே..! வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு டீ பிடிக்குமா..? உடனே நீங்கள் என்ன கேள்வி இது, டீ பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? என்று சொல்வீர்கள்.
உண்மை தான், உணவை விடவும் டீயை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். சரி அதை விடுங்க இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தானே..! ஆனால் பலரும் மாத்திரை டீயுடன் சாப்பிடுவார்கள். நீங்களும் இதுபோல சாப்பிடுபவரா.! அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..! அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா
டீயுடன் மாத்திரை சாப்பிடலாமா..?
பெரும்பாலும் நம்மில் பலரும் உடல்நிலை சரியில்லாத போது மாத்திரை சாப்பிட பயப்படுவோம். அதனால் சிலர் தண்ணீருக்கு பதிலாக டீயுடன் மாத்திரையை சாப்பிடுவார்கள்.
உதாரணதிற்கு தலைவலி என்றால் தலைவலி மாத்திரையை டீயுடன் சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி செய்வது நல்லதா கெட்டதா என்று நம்மில் பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு டீ, காபி குடிக்கிறீர்கள்.. இதை தெரிஞ்சுக்கிட்டு குடிங்க
பொதுவாக டீயுடன் மாத்திரைகளை உட்கொள்வது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் டீயில் உள்ள காஃபின் தூக்க மாத்திரைகளின் விளைவைக் கொல்லும் என்பதால், டீயுடன் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுபோல டீயுடன் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட 30-60 நிமிடங்களுக்கு தேநீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் தேநீரில் கணிசமான அளவு கேட்டசின் உள்ளதால் அது இரும்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இது நமது உடலில் பல சிக்கலான தன்மையை உருவாக்குகிறது. இதன் காரணமாக தான் டீயுடன் மாத்திரைகளை உட்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |