Coffee Benefits in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் காலையில் எழுந்த உடனே டீ அல்லது காபி குடிக்காமல் யாராலும் இருக்க முடியாது. நம் நாட்டில் காபி பிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றார்கள். இந்த டீ மற்றும் காபியை காலை மாலை மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோல காபி குடிப்பது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எல்லாரிடமும் இருக்கின்றது. அந்த வகையில் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தினமும் 2 க்கு மேல் டீ, காபி குடிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஆயுள் கெட்டி என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
காபி என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு பானமாக திகழ்கிறது. நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் காபி முக்கிய பங்கு வகிக்கிறது. காபி என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காபி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
தினமும் காபி குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. காபியில் காஃபின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. மேலும், பொட்டாசியம், B காம்ப்ளக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மெக்னிசியம் போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன.
நீரிழிவு நோய் வராமல் தடுக்க:
இந்த காபி நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் காபி குடிப்பதால் அவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
சர்க்காரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 முறை காபி குடிப்பதால் இரத்தத்தில் 50% சர்க்கரையின் அளவை குறைக்க முடியும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. அதனால் காபி குடிப்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க:
காபி குடிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. நரம்புகள் தூண்டப்படுவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் காபி குடிப்பதால் மூளை சம்மந்தப்பட்ட நோய்களான டிமென்ஷியா, அல்சைமர் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
உடல் எடை குறைக்க:
காபியில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இருப்பதால் அது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது உடல் எடை குறைக்கவும் மற்றும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
கொழுப்புகளை கரைப்பதால் உடல் எடை குறைகிறது. தினமும் 2 கப் காபி குடிப்பதால் உடலில் கொழுப்பை தங்க விடாமல் கரைக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
இதயநோய் வராமல் தடுக்க:
தினமும் காபி குடித்து வருவதால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது. காபி குடிப்பது இதயநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. தினமும் காபி குடிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவாக காணப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |