செரிமான பிரச்சனை நீங்க இஞ்சி லேகியம்..!

Advertisement

செரிமான பிரச்சனை நீங்க  (Digestive problem) இஞ்சி லேகியம்:-

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் (Digestive problem) உண்டாகும். நாம் உண்ணும் உணவு செரிக்க, உமிழ் நீர் தேவை. உமிழ் நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளாறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் (Digestive problem) வரும்.

இந்த அஜீரண பிரச்சனையை சரிசெய்வதற்கு இஞ்சி மிகவும் பயன்படுகிறது. இஞ்சி வயிற்றுக்கோளாறுகளை (Digestive problem) சரிசெய்யும். ஜீரண சக்திக்கு உகந்தது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் ? அற்புத நன்மைகள்..!

செரிமான பிரச்சனை நீங்க இஞ்சி லேகியம் – தேவையான பொருட்கள்:

  • இஞ்சி – 100 கிராம்
  • வெல்லம் – 200 கிராம்
  • மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் – 10 கிராம்
  • நெய் – தேவையான அளவு.

இஞ்சி லேகியம் செய்வது எப்படி?

இஞ்சி லேகியம் செய்முறை: 1

இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து பார்த்தால் தெளிந்து இருக்கும்.

இஞ்சி லேகியம் செய்முறை: 2

அந்த தெளிந்ததை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும், பின்பு வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும்.

மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.

மாத்திரை மருந்தை தேடி அலையாமல் இயற்கை நமக்கு கொடுத்த வரங்களை பயன்படுத்தலாமே??

புட் பாய்சன் (Food Poison) குணமாக சிறந்த கைவைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement