இரவு சரியாக தூங்க மாட்டீர்களா..! அப்போ அவ்ளோ தான்..!

Advertisement

தூக்கமின்மையின் விளைவுகள்

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லையென்றால் மறு நாள் நம் வேலைகளை சரியாக செய்ய முடியாது. மேலும் உடல் சோர்வு நிலையுடன் காணப்படும். இதோடு மட்டுமில்லாமல் உடலில் சரி, மனதிலும் சரி பாதிப்பை  ஏற்படுத்தும். அதில் முக்கியமான 5 பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ இரவு தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க

மன அழுத்தம் ஏற்படுகிறது:

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் வருடம் முழுவதும் அப்படியே நீடித்தால்  மன அழுத்தம் பிரச்சனை ஏற்படும். இரவு தூங்கும் போது நிம்மதியாக எதையும் நினைக்காமல் தூங்குங்கள்.

இதய பிரச்சனை:

இரவு சரியாக தூங்கவில்லை என்றால் இதயத்தில் பிரச்சனை ஏற்படும். தூக்கம் இல்லாததால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பிரச்சனை ஏற்படும்.

சுவாச அமைப்பு:

தூக்கத்திற்கும், சுவாசத்திற்கு இடையே தொடர்பு உள்ளது. அதனால் நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் சளி மற்றும் நுரையீரலில் பிரச்சனை ஏற்படும். மேலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தூங்காமல் இருந்தால் சுவாச பிரச்சனையை அதிகப்படுத்தும்.

மூளையின் அமைப்பு:

நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் மூளையின் செயல்பாட்டை குறைவடையை செய்யும். அதுமட்டுமில்லாமல் ஞாபக சக்தி குறையும். அதனால் மூளையை சிறப்பாக செய்லபட தூக்கம் அவசியமானது.

இரத்த சர்க்கரை அளவு:

தூக்கமின்மையால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. மேலும் உடலை சோர்வடைய செய்யும் மற்றும் மயக்கம் பிரச்சனையை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி: 

நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதிக்க செய்யும். அதனால் உங்களின் உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை எதிர்த்து போராட முடியாது.

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க இரவு நன்றாக தூங்குங்கள் நண்பர்களே..! இரவு போன் பயன்படுத்துவதை தவிர்த்துடுங்கள். நீங்கள் அதிகம் நேரம் போன் பயன்படுத்தும் போது தூக்கம் கலைந்துவிடும். மேலும் இரவு  தண்ணீர் அதிகமாக குடிக்காதீர்கள். இப்படி செய்தால் இரவு அடிக்கடி கழிவுகளை கழிக்க வேண்டியிருக்கும் அப்போது தூக்கம் கலைந்துவிடும்.

இரவு தூக்கம் போது நிம்மதியாக அல்லது மனதிற்கு பிடித்த விஷயங்களை நினைத்து கொண்டு படுங்கள்.  இதை மட்டும் Follow பண்ணுங்க தூக்கம் அப்படி வரும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement