இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

disadvantages of wearing tight underwear in tamil

உள்ளாடைகள் இறுக்கமாக அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் ஆண் பெண் இருபாலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். பொதுவாக இதுபோல் தவறுகளை பெண்கள் தான் அதிகம் செய்கிறார்கள். உள்ளாடைகள் முக்கியம் என்று அதனை அதிகம் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் சில தீமைகளை செய்துகொள்கிறார்கள். ஆனால் இப்போது பெண்களை விட ஆண்கள் தான் இறுக்கமான ஆடைகளை அணிகிறார்கள்.

முக்கியமாக உள்ளாடைகளை இறுக்கமாக அணியக்கூடாது இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது வாங்க அதனை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம்..!

Effects of Wearing Tight Underwear in Tamil:

பொதுவாக இறுக்கமான ஆடைகளை கூட அணிய மாட்டார்கள் இதற்கு காரணம் அறிவியல் ரீதியாக காரணம் உள்ளது. அதேபோல் ஆண். பெண்கள் இருவரும் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

Effects of Wearing Tight Underwear For Guys in Tamil:

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஆகும். உள்ளாடைகளை இறுக்கமாக அணிந்தால் அதிலிருந்து வெளிவரும் சூடு விந்தணு எண்ணிக்கையை குறைகிறது. இது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இறுக்கமான ஆடை அணிவதால் இரத்த ஓட்டம் தடை படுகிறது. அது எப்படி என்று யோசிப்பீர்கள். எந்த இடத்தில் இறுக்கமான ஆடை அணிகிறீர்களோ அந்த இரத்தில் செயல்படும் நரம்புகள் உணர்ச்சி இழந்து போகும். அதேபோல் அந்த இடத்தில் இரத்தம் செயல்படாது என்றும் இதனால் இரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. அந்த இடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்துபோகும்.

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு  என்றால் அது பிறப்பு உறுப்பு தான். அந்த இடத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவதால் எரிச்சல், அலர்ஜி போன்ற தொற்றுகள் ஏற்பட முக்கிய காரணம் இறுக்கமான உள்ளாடைகள் தான். அதேபோல் உடல் நலம் பாதிப்புகளும் ஏற்படும்.

ஆண்கள் சில இடங்களில் வேலைபார்க்கும் போதும் அந்த இடத்திற்கு என்று சில விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் ஆனால் அவர்கள் தொடை வரை டக்கிங் செய்துகொள்வார்கள். அப்படி செய்வதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அமில எதிர்வினை வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும்.

உடலுறுப்பு பகுதியில் காற்று செல்ல வேண்டும் இல்லையென்றால் அந்த இடத்தில் வியர்வை ஏற்பட்டு அவ்விடத்தில் பாக்டீரியா தங்கி தொற்றுக்களை ஏற்படுத்தி உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட உள்ளாடைகளில் அணியும் போது அதில் இருக்கும் கெமிக்கல் உடலில் சர்ம நோயை ஏற்படுத்தும். அது சிவந்த தடிப்பு போன்ற கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இதையும் தெரிந்துகொள்ளலாம் உங்களுக்கு பயனளிக்கும் 👉 பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

புதிய ஆடை வகைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil