மலர்களின் மருத்துவ குணங்கள்..! Flowers And Their Uses..!
Medicinal Flowers And Its Uses: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் மலர்கள் மற்றும் அதன் மருத்துவம் நிறைந்த குணங்களை பற்றி பார்க்கப்போகிறோம். சில பேர் மலர்களை அழகிற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். மலர்களும் பல வித நோய்களை நீக்கும் மருந்தாக விளங்குகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. பூக்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்தவர்களும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அரிவது இல்லை. ஒவ்வொரு மலர்களிலும் தனித்துவம் மிக்க மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது மலர்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை பற்றி விரிவாக படித்தறியலாம்..!
அகத்தி பூ மருத்துவ குணங்கள்:
அகத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை பிடிப்பதால் உடலில் ஏற்படும் விஷ சூட்டினையும், பித்தம், உடல் சூடு போன்றவைகளை நீக்கிவிடும்.
முருங்கை பூ மருத்துவ குணங்கள்:
முருங்கை பூ சாப்பிடுவதால் உடலில் பித்த கோளாறுகள், வாந்தி நீங்கும். அதோடு கண்கள் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். காம உணர்வினை அதிகரிக்க செய்யும்.
ஆவாரம் பூ மருத்துவ குணங்கள்:
இரத்தத்திற்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவினை 15 கிராம் அளவிற்கு நீரில் போட்டு கஷாயம் செய்து அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர உடல் சூடு, நீரழிவு, நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் நீங்கிவிடும்.
செந்தாழம் பூ மருத்துவ குணங்கள்:
செந்தாழம் பூ சாப்பிட்டு வந்தால் தீராத தலை வலி குணமாகும். அடுத்து ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் போன்றவை நீங்கும். அதோடு உடலை அழகாக வைத்திருக்கும்.
அத்தி பூ மருத்துவ குணங்கள்:
அத்தி பூவினை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி அவற்றில் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்ப தன்மை, பித்த சூடுகள் நீங்கும்.
நெல்லி பூ மருத்துவ குணங்கள்:
நெல்லி பூ உடலுக்கு குளிர்ச்சியினை தரும். அதோடு விழுதி இலை, வாத நாராயண இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
மாதுளம் பூ மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் போன்ற நோய்கள் மாதுளை பூவினை சாப்பிட்டு வர நீங்கும். அது மட்டும் இல்லாமல் உடலில் இரத்தம் அதிகரித்து உடலுக்கு ஊட்டத்தினை அளிக்கும்.
செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள்:
செம்பருத்தி பூவானது இருதயம் பலவீனம் அடைந்தவர்கள், அடிக்கடி மார்பக வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்தி பூவினை நீரில் நன்கு காய்ச்சி காலை மற்றும் மாலை வேலைகளில் குடித்து வர இதயம் நன்றாக பலம் அடையும்.
மந்தாரை பூ மருத்துவ குணங்கள்:
மந்தாரை பூ உட்கொள்ளுவதால் உடல் கொதிப்பு நீங்கும். குறிப்பாக இந்த மலர் உடல் மற்றும் கண்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
பச்சை குங்குமப்பூ மருத்துவ குணங்கள்:
பச்சை குங்குமப்பூ சாப்பிடுவதால் மூக்கடைப்பு, ஜலதோஷம், காதுகளில் ஏற்படும் நோய்கள், கப பித்த நோய்கள் அனைத்திற்கும் இந்த பூ தீர்வு வகிக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |