பச்சை வாழைப்பழம் நன்மைகள் | Green Banana Benefits in Tamil

Green Banana Benefits in Tamil

பச்சை வாழைப்பழம் பயன்கள் | Pachai Valaipalam Benefits in Tamil

வாழைப்பழங்களில் ரஸ்தாளி, பேயன், பூவன் போன்ற பல வகையான வாழைப்பழங்கள் இருக்கிறது. நாம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது இந்த பச்சை வாழைப்பழம். உணவு தயாரிப்புகளில் பெரும்பாலும் இந்த பச்சை வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாங்க மேலும் பச்சை வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பச்சை வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

 பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள்

பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், பைபர், வைட்டமின் பி6, மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

 பச்சை வாழைப்பழம் மருத்துவ குணங்கள்

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. நீரிழிவினால் அவதிப்படும் நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

கெட்ட கொழுப்புகளை குறைக்க:

 pachai valaipalam benefits in tamil

பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்துவிடுகிறது. பச்சை வாழைப்பழங்களில் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் உடல் செரிமானத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

தலைவலி நீங்க:

 பச்சை வாழைப்பழம் நன்மைகள்

பலருக்கும் தலைவலி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதிக மன அழுத்தம், கவலை, வேலை டென்ஷன், அதிகமாக மொபைல் கணினி பார்ப்பது போன்றவைகளால் தலைவலி பிரச்சனை வருகிறது. பச்சை வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் தலைவலி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கிறது. மேலும் உடலை தளர்த்தி வலிகள் அனைத்திற்கும் நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

அல்சர் குணமாக:

 green banana benefits in tamil

காலையில் அவசர அவசரமாக வேலைக்கு செல்வதால் பலரும் காலை உணவினை இப்போது மறந்துவிட்டார்கள். இதனால் அல்சர் என்ற நோய் வந்துவிடுகிறது. அல்சர் நோயானது குடலில் சுரக்கும் அமிலங்களும், நச்சு பொருட்களும் அரிப்பதன் காரணமாக அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பாதிப்பிலிருந்து நிரந்தரமாக விடுபட பச்சை வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.

உடல் எடை குறைய:

 பச்சை வாழைப்பழம் பயன்கள்

உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவதால் தான் உடல் எடை அதிகமாகிறது. அதிக உடல் எடையினால் நம்மளால் எந்த ஒரு வேலைகளையும் முழுமையாக செய்ய முடியாது. நெடுந்தூரம் அவர்களால் நடந்து செல்ல முடியாது. ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதால் கூட உடலில் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினம்தோறும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர உடல் ஸ்லிம்மாகும்.

மலை வாழைப்பழம் பயன்கள்

தசைகள் பலப்படும்:

 பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள்

பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. உடலில் பொட்டாசியம் சத்தினை அதிகரிப்பதற்கு வேக வைத்த பச்சை வாழைப்பழத்தினை சாப்பிட்டு வரலாம். பச்சை வாழைப்பழமானது தசைகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தசைகளில் ஏற்படும் வலிகளையும் முற்றிலும் குணப்படுத்துகிறது இந்த பச்சை வாழைப்பழம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்