முடி வளர உதவும் உணவுகள்..! Hair Growth Foods List in Tamil..!

முடி வளர

முடி வளர உதவும் உணவுகள்..! Hair Growth Foods List in Tamil..!

Hair Growth Foods List in Tamil:- பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு அழகை கூட்டுவதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது தலைமுடியே. அனைவருக்குமே முடி ஆரோக்கியமாக, அடர்தியாக, நீளமாக வளரவேண்டும் என்ற ஆசை இருக்கும்.

சிலர் முடி பராமரிப்புக்காக சந்தையில் விற்கப்படும் விதவிதமான கூந்தல் எண்ணெய் மற்றும் ஷாம்புவினை பயன்படுத்துகின்றனர். அவை எல்லாம் வெளிப்புறம் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்புறத்திற்கு என்றுமே ஊட்டமளிப்பதில்லை.

இருப்பினும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை தினமும் அதிகளவு உட்கொள்வதினால் கூந்தல் ஆரோக்கியமாக மற்றும் அடர்த்தியாக வளர உதவும்.

முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

 

அந்த வகையில் கூந்தல் வளர்ச்சிக்கு (Hair Growth Foods List in Tamil) உதவும் சில உணவு வகைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முடி வளர உதவும் உணவுகள் – முட்டை:-

Hair Growth Foods List in Tamil

Mudi valara tips: 1 முட்டையில் ஏராளமான புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது.

முடி வளர உதவும் உணவுகள் – பீன்ஸ்:-

Mudi valara tips: 2 பீன்ஸில் கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் என்று பல வகைகள் உள்ளது. இவை அனைத்திலும் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. எனவே இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும், கூந்தல் வளர்ச்சியையும் கொடுக்கின்றது.

மேலும் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முடி வளர உதவும் உணவுகள் – கேரட்:-

Hair Growth Foods List in Tamil

Mudi valara tips: 3 கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் கூந்தலுடன் சேர்த்து, கண்களுக்கும் நல்லது. சருமம் மற்றும் கூந்தலை பாதுகாக்கும் தன்மை கேரட்டுக்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன.

இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன. தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

முடி வளர உதவும் உணவுகள் – சர்க்கரை வள்ளிக்கிழங்கு:-

Hair Growth Foods List in Tamil

Mudi valara tips: 4 வறட்சியான சருமம் மற்றும் முடி, பொடுகு போன்ற பிரச்சனைகள், வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் ஏற்படுகின்றது.

எனவே சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகளவு வைட்டமின் ஏ ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் இது செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன.

இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்…

Mudi valara food tips in tamil – பசலை கீரை:-

Hair Growth Foods List in Tamil

Mudi valara tips: 5 பசலைக் கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது.

மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது.

இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Natural Beauty Tips