சீக்கிரம் கரு தங்க என்ன செய்ய வேண்டும்?

How to Get Pregnant Fast in Tamil

கருத்தரிப்பது என்பது ஒரு பெண்ணின் இன்றியமையாத நிகழ்வாகும். இருப்பினும் இப்பொழுது திருமணம் ஆன தம்பதியர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை. ஆனால் இத்தகைய பிரச்சனையை கண்டு எப்பொழுதுமே பெண்கள் மனம் தளரவிட கூடாது. இப்போதேல்லாம் இந்த பிரச்சனைக்கு நிறைய சிகிச்சை முறைகள் இருக்கிறது. ஆகவே நீங்கள் நல்ல ஒரு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டாலே போது உங்களுக்கு குழந்தை பெரு கிடைக்க கூடும். சரி இந்த பதிவில் சீக்கிரம் கரு தங்க பெண்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

கரு தங்க என்ன செய்ய வேண்டும்?

அக்குபஞ்சர்: 

கருத்தரிக்க விரும்பும் பெண்கள் அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி அவர்களிடம் கருத்தரிப்பதற்கான அக்குபஞ்சர் உடற்பயிற்சியை செய்வதன் மூலம் தங்களுக்கு சீக்கிரம் கரு தங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்கள் கரு தங்க என்ன சாப்பிட வேண்டும்?

மன அழுத்தம்:

மனிதர்களுடைய வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பக பலவிதமான பிரச்சனைகளை கொண்டுவருவதற்கு முக்கிய காரணமே இந்த மன அழுத்தம் தான். குறிப்பக திருமணம் ஆன பெண்களுக்கு கருத்தரிக்கவில்லை என்றால் அதற்கு மனம் அழுத்தமும் ஒரு முக்கியமான காரணம். ஆகவே மனதில் எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து கவலையடையாதீர்கள். எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

யோகா பயிற்சிகள்:

உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுவது யோகா பயிற்சிகள் மட்டுமே. யோகா பயிற்சிகளை மேற்கொள்வதால் உடலில் இரத்த ஓட்ட செல்கள் சீராகும். அதுமட்டும் இல்லாமல் பெண்களுக்கு இனப்பெருக்க மண்டலத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும். யோகா செய்வதினால் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் நன்கு வலுப்பெறும்.

இதையும் படியுங்கள் கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்..!

ஃபோலிக் அமிலம்:

கருத்தரிக்க விரும்பு பெண்களுக்கு மருத்துவர்களால் வழங்கப்படும் ஒன்று தான் ஃபோலிக் அமிலம் மாத்திரை. இந்த ஃபோலிக் அமிலம் பெண்களுக்கு சீக்கிரம் கருத்தரிக்க உதவிபுரிகிறது. ஆகவே நீங்கள் சீக்கிரம் கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் Folic Acid Tablet மருத்துவர்களின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். மாத்திரை சாப்பிட விருப்பம் இல்லையென்றால் இந்த ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளுக்கும் இருக்கின்றன.

ஆகவே நீங்கள் அந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமும் சீக்கிரம் கருத்தரிக்கலாம். குறிப்பாக ப்ரோக்கோலி, கீரை, அடர் பச்சை காய்கறிகள், வெண்ணெய், பருப்பு வகைகள் – பீன்ஸ் மற்றும் பயறுகள், பச்சை பட்டாணி, பீட்ரூட், பப்பாளி, வாழை, ஆரஞ்சு, முழு தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, அரிசி ஆகியவற்றில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள் கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம்?

சுத்தம்:

சீக்கிரம் கருப்பமாக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் உங்கள் உள்ளுறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளுறுப்புகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பால், தயிர், கீரைகள், பழங்கள், காய்கறிகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு:

கருத்தரிக்க விருப்பும் பெண்கள் கொஞ்சம் நாள் உங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.

ஐஸ் கிரீம், சிக்கன், எள்ளு, பப்பாளி பப்பாளி பழம், கேஸ் நிறைந்த திரவங்கள், கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பாஸ்ட் புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள கூடாது.

மேல் கூறப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும் நீங்கள் வெகு சீக்கிரமாகவே கர்ப்பமாக்கலாம்.. நன்றி வணக்கம்..

இதையும் படியுங்கள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips  in Tamil